Sunday, October 6
Shadow

விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி

லோக்கல் டிவி சேனல், திருட்டு விசிடி கடைகள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரத்தும் விஷாலை துரத்தும் ஒரே விஷயம் என்னவென்றால் அவரின் ‘கல்யாண பேச்சுதான்’.

ஊடகங்கள், சகா நடிகர்கள் கலந்துக்கொள்ளும் விழா மேடைகள், என எதுவும் விஷால் – வரலட்சுமியை விட்டுவைக்கவில்லை. ஒருக்கட்டத்தில் “நடிகர்கள் சங்க கட்டட வேலை முடிஞ்சோன அங்கே ஒரு லக்ஷ்மிகரமான பொண்ணோட, முதல் கல்யாணம் என்னோடதுதான்” என்று விஷால் கிண்டலாக பேச, அது இன்னும் காட்டு தீ போல பரவியது.

இந்நிலையில் இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி இணையதளங்களில் பரவிவருகிறது.

அதாவது, விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நேரடியாகவே வரலட்சுமியுடனான காதலை ஒப்புக்கொண்டு, எங்கள் இருவருக்கும் நடிகர் சங்கத்தில் தான் திருமணம் நடைப்பெறும் என்று பேசியுள்ளாராம்.

அதே போல, நடிகர் சங்கத்தில் மற்றொரு முக்கிய பொறுப்பாளரான கார்த்தியுடன் தன் திருமணத்திற்காக நடிகர் சங்கத்தின் மண்டபத்தில் குறிப்பிட்ட நாட்களை தடுத்து வைக்குமாறு விஷால் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply