
அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ‘இசைப் புயல்’ ஏ.ஆர்,.ரஹ்மான் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல்பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு படத்தில் இரண்டு இளம் பெண்களுடன் காட்சியளிக்கும் அவர்,’எனது இசைக் குழுவுடன் ஹிரோஷிமாவை நோக்கி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் ஹிரோஷிமா அமைதி நினைவுச் சின்னத்தின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் அவரின் ரசிகர் ஒருவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் இருந்து, அமைதி மற்றும் சகோதரதத்துவத்தை வலியுறுத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக ரஹ்மான் ஹிரோஷிமா வந்திருக்கிறார் என்ற விஷயம் தெரிய வந்தது.