Sunday, February 25
Shadow

2. ௦ முதல் பார்வை நிகழ்ச்சியில் ரஜினி இமேஜ் உடைத்த லைக்கா குழுவினர்

சினிமா துறையில் இருக்கும் பாலிடிக்ஸ் எப்பவும் பாலிவுட்டில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதுவும் வேற மாநிலத்து ஆளுங்க வந்தா விடவே மாட்டார்கள்.

அதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் பெரிய இடத்திலிருக்கும் அமிதாப், சல்மான்கான், ஷாருக்கான் அவர்களை எல்லாம் மீறி தாண்டி அவர்களுக்கும் பயத்தை காமிச்சது ரஜினி மட்டுமே… இப்பவும் ரஜினி இந்திக்குப் போனால், ரசிகர்களை சாதரணமாக கவர் பண்ணிடுவார். அந்த வித்தைலாம் அவருக்கு அத்துபொடி. ஆனால் பாலிடிக்ஸ் வேலைலாம் அவருக்கு தலைவலி. இதுக்குதான் மும்பையில் நடந்த 2பாயின்ட்0 படத்தின் முதல் லுக் வரவில்லை என்று முன்பே கூறினார். (ஆனால் சிபாரிசில் வேறுவழியின்றி வந்தார்.)

விழா நடக்கும் அரங்கமே ஒரு வாரமாகவே பரபரப்பா உருவாக்கப்பட்டு வந்ததாம். அடிக்கடி அந்த வழியாக கிராஸ் ஆகி வந்த சல்மான்கான், மனதுக்குள் என்ன நினைத்தாரோ, திடீரென வந்து பாலிடிக்ஸ் குண்டை வைத்து விட்டு போய்ட்டார். !

இப்படியொரு விழாவை மும்பையில் ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம், சிறப்பு விருந்தினராக முதலில் சல்மானைதான் அழைத்ததாம். ஆறு கோடி ரூபாய் கேட்டாராம் அவர். என்ன காரணத்தாலோ திட்டம் கைவிடப்பட்டது. அதற்கப்புறம் இந்த விழாவுக்காகவே காத்திருந்தவர், அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிட்டார். சரி இதுவும் நல்ல விஷயம்தானே? அதெப்படி நல்ல விஷயம் ஆகும்?

மும்பை மீடியாக்கள் மொத்தமும் விழா நாயகரான ரஜினியை விட்டுவிட்டு, சல்மான்கான் மீது போகஸ் ஆகிவிட்டன. “எனக்கு யாரும் அழைப்பு விடுக்கல. நானேதான் அழையா விருந்தாளியாக வந்திருக்கிறேன்” என்று அவர் சொல்ல, இன்னும் பரபரப்பானது மீடியா. திருப்பி திருப்பி சல்மானையே முன்னிறுத்தின. 2பாயின்ட்0 இரண்டாம் பட்சம் ஆனது. ஆக மொத்தம் வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவரது படத்தையும், அதன் விளம்பரத்தையும் தனி ஒரு ஆளாக நின்று தடுத்துவிட்டார் சல்மான்!

Leave a Reply