ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 75% முடிந்துவிட்டதாவும் இன்னும் 20 முதல் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் ஷங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 20-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான விழாவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.