பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் என்றாலே நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாகத்தான் இருக்கும் அப்படியான ஒரு படம் தான் 2018 இயற்கையின் சீற்றத்தை மையமாக வைத்து எடுத்திருக்கும் இந்த படம் அதோடு மனிதர்களின் சில குணாதிசயங்களையும் இந்த கதையோடு கலந்து மிக அற்புதமான ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகைக்காது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை 2018 பெய்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பாதிப்பை தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் அதோடு மனிதனுக்கு மனிதனுக்கு இருக்கும் சில குணாதிசயங்கள் நல்லது கெட்டது ஆணவம் பணம் நட்பு காதல் இப்படி போ இப்படி போன்ற உணர்வுகளை மையமாக வைத்து இந்த கதையோடு கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்
பொதுவாக கேரளா மக்கள் மழை என்றாலே ரசிப்பார்கள் அதை வரவேற்பார்கள் காரணம் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது என்ற ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏனென்றால் அவர்களுடைய பகுதி மலைப்பகுதி ஆகவே தண்ணீர் நிற்காமல் தேங்காது என்ற ஒரு மிகப்பெரிய தைரியத்தில் இருப்பார்கள் ஆனால் 2018 பெய்த மழை அவர்களின் எண்ணத்தை மாற்றியது வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட விபரீதம் வெள்ளப்பெருக்கு இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள் இந்த படத்தில் இதுதான் இந்த படத்தின் கதை கரு இந்த மழை உள்ளத்தில் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் எப்படி இந்த வெள்ளத்தில் இருந்து தப்பித்தார்கள் இதில் மனிதாபிமானம் எப்படி ஜெயித்தது என்பதை சொல்லும் படம் தான் இந்த கதை 2018 திரைப்படம்
படத்தில் மலையாளத்தில் மிக முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் மிகவும் இயல்பாக எடுத்திருக்கிறார்கள் தமிழ் நடிகர் என்று சொன்னால் ரமேஷ் சிலர் கலையரசன் போன்ற நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் ஒரு ஆபத்து என்று வரும்போது மனிதனின் குணாதிசயங்களை எப்படி இருக்கிறது யார் எப்படி என்ற மிக அற்புதமாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த படம் இது ஒரு டப்பிங் படம் என்றாலும் அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய ஒரு படம் என்று தான் சொல்ல வேண்டும்
படத்தில் இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆக வேண்டும் அதோடு கலை இயக்குனரின் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இப்படி ஒரு மழை வெள்ளத்தில் மிக நேர்த்தியான படப்பிடிப்பு அற்புதமான திரைக்கதை இயக்குனரின் ஒளிப்பதிவாளரும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அந்த அளவுக்கு ஒரு மிக சிறந்த படமாக கையாண்டு இருக்கிறார்கள் இப்படி ஒரு வெள்ளத்தில் படப்பிடிப்பு நடத்தியது என்பது அற்புதமான விஷயம் அதேபோல கலை கிணறு அவர் போட்டிருக்கும் செட்டுகள் செட்டா நிஜமா என்று வியக்கும் வைக்கும் அளவுக்கு மிக அற்புதமாக செய்திருக்கிறார் அவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் இந்த கதைக்கு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் இயக்குனர் ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் இவர்களின் பங்கு மிக மிக அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.