
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில் உருவாகும் ‘29’:டைட்டில் லுக் & ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தலைமையிலான ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் திரைப்படமான ‘29’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ சென்னையில் வெளியிடப்பட்டது.
ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட புதிய தலைமுறை நடிகர்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, சதீஷ்குமார் திருத்தம், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு என படக்குழு வலுவாக அமைந்துள்ளது.
விழாவில் கலந்து கொண்டவர்கள்
இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், ரத்னகுமார், தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், நடிகர் விது, நடிகைகள் ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் ஃபாத்திமா மற்றும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ப்ரீத்தி அஸ்ராணி: “ஸ்டோன் பெஞ்சில் நடிப்பது என் கனவு”
ப்ரீத்தி அஸ்ராணி தனது அனுபவத்தை பகிர்ந்து,
“தமிழில் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸுடன் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. ‘29’ அந்த கனவை நிறைவேற்றிக் கொடுத்தது. படம் ஒரு ரொமான்டிக் ஸ்டோரி என்றாலும், பார்வையாளர்களை உள்ளுக்குள் ஒரு கேள்வி எழுப்ப வைக்கும் தன்மை இந்த படத்திற்கு உண்டு,” என்றார்.
விது: “இந்த படம்… நான் யார் என்று எனக்கு கேட்க வைத்தது”
நாயகன் விது தனது வாழ்வில் புதிய அத்தியாயம் துவங்கியதாகக் கூறினார்.
“என்னை கதாநாயகனாக கண்டது, தேர்வு செய்தது இயக்குநர் ரத்னகுமார் தான். ஷான் ரோல்டன் இசைக்கு நான் மிக பெரிய ரசிகன். இந்த படம் என் 29 வயதின் ஒரு உணர்வுப் பயணமாய் இருந்தது,” என்றார்.

ஷான் ரோல்டன்: “ரத்னகுமாரின் கதையே என் இசையாக மாறியது”
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,
“ரத்னகுமார் ஒரு நேர்மையான கலைஞர். அவர் சொல்லிய கதையே இசை வடிவம் பெற்றது. இரண்டு பாடல்கள் தயாராகி விட்டன. மற்ற பாடல்களும் விரைவில் உருவாகும்,” என்றார்.
கார்த்திகேயன் எஸ்: “விதுவின் வளர்ச்சியை 3 வயதில் இருந்தே பார்க்கிறேன்”
தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ் பேசுகையில்,
“விது எனக்கு சகோதரனே. அவர் ஹீரோவாக மேடையில் நிற்பதைப் பார்ப்பது ஒரு உணர்ச்சி தருணம். ‘மேயாத மான்’ முதல் இன்று வரை 17 படங்களை உருவாக்கியுள்ளோம். ‘29’ எங்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய படைப்பு,” என்றார்.

இயக்குநர் ரத்னகுமார்: “என் 29 வயதின் உள்ளார்ந்த குழப்பம் தான் இந்தக் கதையின் தளம்”
ரத்னகுமார்,
“29 வயது—ஒரு மனிதன் வாழ்க்கையில் திருப்பம் கொள்ளும் வயது. அந்த வயதில் தான் நான் ‘நான் யார்?’ என்று என்னை நான் எதிர்கொண்டேன். அந்த உணர்வை ஒரு ரொமான்டிக் படமாக வடிவமைத்ததே ‘29’. இது பக்கத்து வீட்டுப் பையன் வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லும் கதை,” என்றார்.
கார்த்திக் சுப்புராஜ்: “விது இந்தப் படத்துக்கான சரியான தேர்வு”
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,
“‘29’ கதை பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்தது. சரியான நடிகரைத் தேடி காத்திருந்தோம். ‘ஜிகர்தண்டா 2’ & ‘ரெட்ரோ’ படங்களில் விது காட்டிய வளர்ச்சியைப் பார்த்த பிறகு தான் இந்த கதையின் ஹீரோவாக அவரை ஒத்துக் கொண்டேன். ரத்னகுமார் எப்போதுமே ஒரு வலிமையான எழுத்தாளர்,” என்று தெரிவித்தார்.

கலைஞர்களின் 29 வயது அனுபவங்கள் – விழாவின் சிறப்பு
விழாவில் கலந்து கொண்ட பலரும் தங்களின் 29 வயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து பேசினர்.
மேலும், ‘29’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் AI இல்லாமல் கைவரையத்தில் உருவாக்கப்பட்டிருப்பதும் விழாவின் மற்றொரு சிறப்பு.
—
