3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் 24 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது !! சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் “ 24”.. நேற்று சீனாவில் உள்ள சீயோன் என்னும் இடத்தில் வைத்து மிகபிரம்மாண்டமாக நடைபெற்ற 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்ற இப்படம் திரையிடப்பட்டது. பெருமைக்கூரிய இத்திரைப்பட விழாவில் 2டி எண்டர்டேயின்மண்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் C.E.O திரு. ராஜ்சேகரபாண்டியன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற ரெட் கார்பெட் நிகழ்வில் நடந்தனர் , அங்கே அவர்கள் ரெட் கார்பெட்டில் நடக்கும் போது அருகில் இருந்த ஸ்க்ரீனில் 24 திரைப்படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இதை போன்ற ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து இவ்வளவு நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளீர்கள் என்று மிகப்பெரிய அளவில் பாராட்டினர். சியோனில் விழா நடந்த அந்த இடத்திற்கு சில்க் ரோடு என பெயர் வர காரணம் அந்த இடத்தில் தான் பட்டு ( சில்க் ) வணிகம் அதிகம் நடைபெற்றது. உலகின் எல்லா இடத்தில் இருந்தும் அங்கு வந்து தான் அனவைரும் பட்டை கொள்முதல் செய்து சென்றனர். தமிழகத்தில் உள்ள திருச்சி போல் இதை மைய பகுதி என்று கூறலாம். இந்த திரைப்பட விழா முதலில் சீனாவில் நடைபெற்றது பின்னர் ஐயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் வைத்து நடைபெற்றது பின்னர் இப்போது மறுபடியும் சீனாவில் வைத்து நடைபெறுகிறது. மொத்தம் உள்ள ஐந்து பிரிவுகளில் 24 திரைப்படம் சிறந்த படம் , சிறந்த நடிகருக்கான பிரிவு என இரண்டு பிரிவுகளில் கலந்துகொண்டது. போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த 675 படங்களில் 24 திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என இரண்டு பிரிவுகளில் தேர்வாகி , போட்டியில் பங்கேற்றது.