Sunday, October 1
Shadow

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !*

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீஸர் வெளியானது !

இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின், பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் ! டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு!!

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம் இது. வம்சி இயக்கத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் அதிரடியான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மோசமான கொள்ளைச் சம்பவங்களைச் செய்த ஸ்டூவர்ட்புரம் கொள்ளையன் டைகர் நாகேஸ்வர ராவ் சென்னை மத்திய சிறையில் இருந்து தலைமறைவானது தொடர்பான செய்தி அறிக்கையுடன் இந்த டீஸர் வீடியோ தொடங்குகிறது. இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என்பதால் போலீசார் அதிர்ச்சியடைகின்றனர். புலி மண்டலத்தில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி முரளி சர்மா, டைகர் நாகேஸ்வர ராவின் அரிய திறமைகளை பற்றி டீஸரில் விவரிக்கிறார்.

“நாகேஸ்வரராவ் அரசியலுக்கு வந்திருந்தால், அவர் தனது புத்திசாலித்தனத்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார். அவர் விளையாட்டில் நுழைந்திருந்தால், தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றிருப்பார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால், தன் வீரத்தால் போரில் வெற்றி பெற்றிருப்பார். துரதிர்ஷ்டவசமாக, அவர் குற்றவாளியாகி விட்டார்” என்று டிஎன்ஆரின் திறமைகளை விவரிக்கிறார் முரளி சர்மா.

டைகர் நாகேஸ்வர ராவ் சிறு வயதிலேயே குற்றங்களைச் செய்யத் தொடங்கியதால், சிறுவயதில் இருந்தே கடுமையான இயல்பு கொண்டவராக இருக்கிறார். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அவர் ஏற்படுத்திய அச்சத்தால், அவரைப் பிடிக்க காவல்துறையும் இராணுவப் படையும் களமிறங்குகின்றன.

இந்த டீஸரில் கடைசி வரை அவரது முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், அவரது இருப்பு டீஸர் முழுவதும் தெரிகிறது. பின்னர், அவரது நுழைவு கதையை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. டீஸரில் வரும் ரயில் எபிசோட் அவரது கதாபாத்திரத்தின் தைரியத்தைக் காட்டுகிறது.

ரவிதேஜாவை இந்தப்படத்தின் டீஸரில் பார்த்த பிறகு, இந்த டைட்டில் ரோலில் வேறு எந்த நட்சத்திரத்தையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. கதாப்பாத்திரமாக அவரது உருமாற்றத்தில் இருந்து கதாபாத்திரத்தை சித்தரித்தது வரை, ரவி தேஜா டீஸரில் அசத்தியிருக்கிறார். அவர் தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். இயக்குநர் வம்சியின் சிறப்பான எழுத்து மற்றும் சிறந்த இயக்கம் படத்தை மெருகூட்டுகிறது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

R மேதிவ் தனது கேமரா மூலம் கதைக்கு பிரமாண்டத்தை கொண்டு வருகிறார், இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அபாரமான ஸ்கோரின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் தந்துள்ளார். புரடக்‌ஷன் டிசைனர் அவினாஷ் கொல்லா சிறப்புக்குரியவர். தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களை தொடர்ந்து பான் இந்தியா பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

மொத்தத்தில், புலியின் படையெடுப்பை காட்டும் டீஸர் படத்திற்கு வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 20-ம் தேதி தசரா பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகும் இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்.

எழுத்து – இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : R மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

A Glimpse Into The Glory Of India’s Biggest Thief- Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao- Tiger’s Invasion Begins

The first look poster, followed by the title glimpse shook the entire nation. Now it’s time to witness a glimpse of The Glory Of India’s Biggest Thief- Tiger Nageswara Rao. The much-awaited teaser of Mass Maharaja Ravi Teja’s crazy Pan India project Tiger Nageswara Rao under the direction of Vamsee called Tiger’s Invasion is out now.

The video kicks off with a news report regarding Stuartpuram Thief Tiger Nageswara Rao who had done ill-famed robberies in Hyderabad, Mumbai, Delhi, and many other parts of the country getting absconded from Madras Central Jail. Police are shocked because never has such a thing happened before. The investigative officer played by Murali Sharma who worked in the tiger’s zone narrates the rare skills of Tiger Nageswara Rao.

“Had Nageswara Rao entered politics, he would have won the elections with his intelligence. Had he entered the sports, he would have won a medal for India in athletics. Had he ventured into the army, he would have won a war with his bravery. Unfortunately, he became a criminal,” says Murali Sharma describing the abilities of TNR.

Tiger Nageswara Rao is wilder in nature since his childhood, as he began crimes at a very young age. The police and army battalion are deployed to nab him, such is the fear he instilled in people and the government.

Though we don’t get to see his face till the last portions, his presence is felt all through. Then, his entry makes the narrative much more interesting and engaging. The train episode shows the courageousness of the character.

We can’t imagine any other star in the titular role, after seeing Ravi Teja in it. From undergoing transformation to portraying the character, Ravi Teja is exceptional. He steals the thunder with his wild performance. Director Vamee must be appreciated for his superb writing and brilliant direction. Dialogues are powerful. Srikanth Vissa is the dialogue writer, while Mayank Singhaniya is the co-producer.

R Madhiw brings grandness to the narrative with his camera work, wherein GV Prakash Kumar elevated each sequence with his thumping score. Production designer Avinash Kolla deserves a special mention. Produced grandly by Abhishek Agarwal under the banner of Abhishek Agarwal Arts which made consecutive Pan India blockbusters The Kashmir Files and Karthikeya 2, the production standards look lavish.

On the whole, Tiger’s Invasion has set sky-high expectations for the movie.

Nupur Sanon and Gayathri Bharadwaj play the leading ladies opposite Ravi Teja in the movie slated for release on October 20th for Dussehra.

Cast: Ravi Teja, Nupur Sanon, Gayathri Bharadwaj, Renu Desai, Anupam Kher and others

Technical Crew:
Writer, Director: Vamsee
Producer: Abhishek Agarwal
Banner: Abhishek Agarwal Arts
Presenter: Tej Narayan Agarwal
Co-Producer: Mayank Singhaniya
Dialogues: Srikanth Vissa
Music Director: GV Prakash Kumar
DOP: R Madhie
Production Designer: Avinash Kolla
PRO : Yuvraaj