
“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, படத்தின் கதை, இயக்குநரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து பாராட்டிப் பேசினார்.
விழாவில் அவர் பேசுகையில், “உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களின் குரல் பதிவுக்கு மிகப்பெரிய நன்றி. சூர்யாவுக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என இரண்டு வெற்றிப் படங்களை வழங்கியிருக்கிறார். இரு படங்களுமே மாஸ் மற்றும் கிளாஸ் கலந்த படங்களாக இருக்கின்றன. தற்போது சூர்யா 47 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
மேலும், ஒரு திரைப்படத்தின் கதையை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் விதம் குறித்து பேசிய ராஜமௌலி, “ஒரு சிறந்த திரைப்படம் என்பது இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் கதையை வெறும் ஐந்து நிமிடங்களில் நமக்குள் கடத்திவிட வேண்டும். இந்தப் படத்தின் முழுக் கதையையும் இயக்குநர் என்னிடம் ஒரே ஒரு வரியில் சொன்னார். அந்த ஒரு வரியே என்னை உடனடியாகக் கவர்ந்தது. அங்கிருந்துதான் இந்தப் பயணம் தொடங்கியது” என்று குறிப்பிட்டார்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் குறித்து பேசிய அவர், “ஃபஹத் ஃபாசில் ஏன் எப்போதும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ட்ரான்ஸ்’ போன்ற இருண்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறார் என்று அவரிடம் கேட்டேன். அதேபோல், அவரால் ஒரு வேடிக்கையான, அனைவரும் ரசிக்கக்கூடிய, மனதுக்கு இதமான கதையில் நடிக்க முடியுமா என்றும் கேட்டேன். இந்தப் படம் அதற்கான சரியான பதிலாக அமைந்துள்ளது” என்றார்.
படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ராஜமௌலி, “இசை இல்லாமல் கூட இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன். சிரித்தேன், அழுதேன். படம் என்னை பல்வேறு உணர்வுகளுக்குள் அழைத்துச் சென்றது. ஃபஹத் என்றாலே ஃபஹத் தான். அதேபோல், குட்டிக் குழந்தை சாராவும் தனது அற்புதமான நடிப்பால் ஃபஹத்துக்கே சவால் விடும் வகையில் நடித்திருக்கிறார்” என்று பாராட்டினார்.
தொடர்ந்து, “பிரவீன் கூறியது போல, இது அனைவருக்குமான திரைப்படம். வரும் அக்டோபர் 2ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்தப் படத்தைப் பார்த்து, அனுபவிக்க வேண்டும்” என்று எஸ்.எஸ். ராஜமௌலி கேட்டுக்கொண்டார்.
நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

“A Great Film Can Tell a 2.5-Hour Story in Just Five Minutes” – S.S. Rajamouli Praises ‘Don’t Trouble the Trouble’
Director S.S. Rajamouli attended the event of ‘Don’t Trouble the Trouble’ and praised the film’s unique storyline, the director’s approach, and the performances of the lead actors.
Speaking at the event, Rajamouli expressed his gratitude to Ulaganayagan Kamal Haasan for lending his voice to the film. He also congratulated actor Suriya for his successful year with ‘Karuppu’ and ‘Vishwanath & Sons’, describing both films as a combination of mass appeal and class. He further said that he is eagerly looking forward to Suriya’s upcoming ‘Suriya 47’, which is scheduled to release in November.
Sharing his thoughts on what makes a great film, Rajamouli said that a truly great movie should be capable of conveying a two-and-a-half-hour story in just five minutes. He revealed that the director narrated the entire story of ‘Don’t Trouble the Trouble’ to him in just one line, and that single line immediately caught his attention. He said that this was where his association with the project began.
Talking about Fahadh Faasil, Rajamouli said that he had asked the actor why he often chooses darker characters in films such as ‘Kumbalangi Nights’ and ‘Trance’. He also asked Fahadh whether he could take up a fun, lovable and feel-good film, adding that ‘Don’t Trouble the Trouble’ is exactly that kind of film.
Rajamouli also shared his personal experience of watching the movie. “Even without the music, I loved watching the film. I laughed, I cried, and the film made me experience a wide range of emotions,” he said.
Praising the performances, Rajamouli said, “Fahadh is simply Fahadh.” He also highlighted the performance of the young Sara, stating that she gives Fahadh tough competition with her impressive performance.
Concluding his speech, Rajamouli echoed Praveen’s words that the film is meant for everyone and invited audiences to experience it in theatres.
‘Don’t Trouble the Trouble’ is set to hit theatres on October 2.
