
“கனவில் தொடங்கிய பயணம்… ‘Take A Shot’ மூலம் திரைப்படத் தயாரிப்பில் புதிய அத்தியாயம் தொடங்கிய ஆஷி – ரியா!”
திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல, மக்களின் மனதோடு உரையாடும் சக்திவாய்ந்த ஊடகம் என்ற நம்பிக்கையுடன், புதிய தயாரிப்பு நிறுவனமான ‘Take A Shot’ தனது பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
நீண்ட காலமாக சினிமா துறையில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை மனதில் சுமந்து வந்த ஆஷி மற்றும் ரியா, அந்தக் கனவை இன்று நனவாக்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக தீவிர திட்டமிடல், கற்றல் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
இந்த புதிய முயற்சிக்கு சினிமா உலகின் முக்கிய பிரபலங்கள் வழங்கிய வழிகாட்டுதலும் ஊக்கமும் பெரும் பங்காற்றியதாக நிறுவனர் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் சுதா கொங்கரா, சிவகுமார் ஆனந்தசுப்ரமணியம், தமிழ் குமரன் மற்றும் செண்பகமூர்த்தி ஆகியோரின் ஆலோசனைகள் தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
“ஒரு முயற்சி செய்து பாருங்கள்” என்ற எளிய ஆனால் சக்திவாய்ந்த அறிவுரையே இந்த நிறுவனத்தின் பெயராகவும், அதன் பயணத்தின் அடித்தளமாகவும் அமைந்துள்ளது.
மேலும், தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தொழில் சார்ந்த சகாக்கள் மற்றும் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த அனைவருக்கும் ஆஷி மற்றும் ரியா நன்றியைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஊக்கமும் நம்பிக்கையும் தான் இந்த புதிய முயற்சிக்கு வலுசேர்த்ததாக கூறியுள்ளனர்.
பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தரமான திரைப்படங்களை உருவாக்குவதே ‘Take A Shot’ நிறுவனத்தின் நோக்கமாகும்.
சினிமா மீதான ஆழ்ந்த அன்பு, பொறுப்புணர்வு மற்றும் நன்றியுணர்வுடன் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ‘Take A Shot’, எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய புதிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“A Journey Born from a Dream: Aashee and Rhea Launch ‘Take A Shot’, Marking a New Chapter in Film Production”
Believing that cinema is not merely a form of entertainment but a powerful medium that connects with people on an emotional level, the new production house Take A Shot has officially begun its journey.
Aashee and Rhea, who have long nurtured the dream of creating a distinct identity for themselves in the film industry, have now turned that dream into reality. The company has taken shape over the past year through careful planning, continuous learning, and unwavering dedication.
The founders stated that the encouragement and mentorship they received from some of the industry’s most respected names played a significant role in this new venture. They expressed their gratitude to acclaimed filmmakers and industry veterans including Mani Ratnam, Sudha Kongara, Sivakumar Ananthasubramaniam, Tamil Kumaran, and Shenbagamoorthy for their valuable guidance and support.
According to them, a simple yet powerful piece of advice—“Take a shot”—became both the inspiration behind the company’s name and the foundation of its journey.
Aashee and Rhea also extended their heartfelt thanks to their families, friends, colleagues, and everyone who stood by them over the years. They acknowledged that the trust, encouragement, and belief of these individuals played a crucial role in bringing this dream to life.
The vision of Take A Shot is to create meaningful films that not only entertain audiences but also leave a lasting impact. The company aims to tell stories that resonate deeply and remain memorable long after the credits roll.
With a deep love for cinema, a strong sense of responsibility, and immense gratitude, Take A Shot has embarked on this exciting new chapter, emerging as a promising new name to watch in the world of film production.
