தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பு காரணம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்பதால் விஜய்க்கு மாபெரும் வெற்றகள் கொடுத்த இயக்குனர் ஆகவே தலைவரை இதுவரை பார்க்காத ஒரு கோணத்தில் பார்ப்போம் என்று சரி தற்போது எங்களுக்கு கிடைத்த தகவல்.

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இங்கு ஒரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி, மீண்டும் தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று ஐபிஎஸ் வேடம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ரஜினி இந்த படத்தில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டாக நடிப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, சக நடிகர்கள் மற்றும் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம் மக்களுக்கு இது ரம்ஜான் காலம் என்பதால் அங்கு வேலைபார்த்த முஸ்லிம் கலைஞர்களுக்கும் இப்தார் விருந்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Related