அறிமுக இயக்குனர் இவரே கதைநாயகனாக நடித்து இயக்கும் : ஜெய கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், நாயகியாக அறிமுக நாயகன் ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை மற்றும் பலர் நடிப்பில் க சத்யராஜ் ஒளிப்பதிவுவில் ஜே கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில்
கதைப்பார்ப்போம் …
படிப்பதற்காக தனது கிராமத்திலிருந்து சென்னை வரும் நாயகன் தான் ஜெய கிருஷ்ணமூர்த்தி. ஜெய கிருஷ்ணமூர்த்தியின் தாயாக வருகிறார் ஈஸ்வரி ராவ். தனது மகனை படிக்க வைத்து மிகப்பெரும் ஆளாக மாற்ற, கனவு கொண்டிருக்கிறார் ஈஸ்வரி ராவ்.
கல்லூரியில் படித்து வருகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி. அதே கல்லூரியில் சாந்தினியும் கல்லூரி படிப்பு பயின்று வருகிறார்.
இருவருக்குள்ளும் நட்பு ஏற்படுகிறது. நட்பு காதலாக மாற, ஒரு கட்டத்தில் சாந்தினியை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த தகவலை தனது தாயிடம் கூறினால், தாய் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில், சாந்தினியுடனான திருமணத்தை மூடி மறைத்து விடுகிறார்.
சென்னையில், ஒரு வீடு எடுத்து மனைவியை சாந்தினியுடன் வாழ்ந்து வருகிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி.
பண கஷ்டத்தில் கட்டிட வேலைக்குச் செல்கிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி. அங்கு அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட, அதனால் அவரது வாழ்க்கை என்னவாக ஆனது என்பதே படத்தின் மீதிக் கதையாக வந்து நிற்கிறது.
நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், இடைவேளைக்குப் பிறகு ஜெய் கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டி ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், குடிக்கு அடிமையாகி அதன் பிறகு அந்த கதாபாத்திரம் என்னவெல்லாம் ஆகும் என்பதை கண்முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார் ஜெய கிருஷ்ணமூர்த்தி.
ஜெய் கதாபாத்திரத்திற்காக அவரின் அயராத உழைப்பு வீணாகவில்லை என்று தான் கூற வேண்டும். நாயகியாக சாந்தினியும் தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு செய்து கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
ஈஸ்வரி ராவ்’ன் கதாபாத்திரம் படத்தில் பேசு பொருளாக மாறியது. க்ளைமாக்ஸில் இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். மகன் மீது வைத்திருந்த பாசத்தை காட்டும்போது கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் ஈஸ்வரி ராவ்.
படத்திற்கு வில்லனே தங்கதுரை என்று கூறும் அளவிற்கு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதை நச்’சென்று செய்து முடித்திருக்கிறார் தங்கதுரை. தீபாவின் கதாபாத்திரமும் பலம் தான்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு இரு தூண்களாக வந்து நிற்கிறது. இரண்டுமே படத்திற்கு மிகப்பெரும் பலம்.
ஆரம்பத்தில் கதை ஓட்டத்தில் சற்று தடுமாறி தடுமாறி பயணித்தாலும், இரண்டாம் பாதியில் டாப் கியர் போட்டு பயணித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா இப்படைப்பை கொடுத்த இயக்குனரை சிகப்பு கம்பளம் விரித்தே வரவேற்கலாம்..
சம காலத்தில் சமூகத்திற்கு தேவையான கதையாக பார்க்கப்படும் இப்படத்தை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்.
ஆலகாலம் – ஆழமான கருத்து…