Tuesday, December 3
Shadow

ஆண்டவன் கட்டளை தமிழக அளவில் முதல் நாளு நாளில் ரூ. 15 கோடி வசூல்

கடந்த செப். 22ஆம் தேதி தனுஷ் நடித்த ‘தொடரி’ படமும் செப். 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும் வெளியானது.

தொடரி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

ஆனால் ஆண்டவன் கட்டளை படத்திற்கு பெரும்பாலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களே வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,60,06,132 வசூல் செய்துள்ளது தொடரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் நாளே ரூ 4.45 கோடியையும் இரண்டாவது நாளில் ரூ 3.72 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ. 4.06 கோடியையும் வசூலித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையிலும், ரூ. 4 கோடியை நெருங்கி உள்ளதாக தெரிகிறது.

எனவே இதுவரை ரூ. 15 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டவன் கட்டளை தமிழக அளவில் முதல் நாளில் ரூ. 2.60 கோடி வசூல் செய்துள்ளது.

அதனை அடுத்து செப். 24ஆம் தேதியில் ரூ. 4.49 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) ரூ. 4.80 கோடியையும் ஈட்டியுள்ளது.

ஆக மொத்தம் முதல் மூன்று நாட்களில் ரூ. 12 கோடியை எட்டியுள்ளது.

Leave a Reply