விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் குறிகிய காலத்தில் பெரிய இடம் பிடித்தவர் அது மட்டும் இல்லாமல் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படி ஒரு ஒரு படம் தான் ஆண்டவன் கட்டளை இதுவரை இவர் ஏற்காத வேடம் எண்டும் சிறந்த கதை என்றும் பேசபடுகிறது முழு நீள நகைசுவை படமாக அமையும் என்றும் பேசபடுகிறது.
காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் கிராமத்து இளைஞராக நடித்துள்ளாராம்.
கே இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.