Friday, October 11
Shadow

தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் “ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் First Look Poster-ஐ, “மக்கள் செல்வன்” திரு. விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். சுவாதி பிலிம் சர்க்யுட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் Teaser-ஐ வரும் 5 ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தன்று நடிகர் விஜய் சேதுபதி வெளீயீட உள்ளார்.
aarambame attagasam movie poster
“ஆரம்பமே அட்டகாசம்” படத்தின் இயக்குனர் ரங்காவை அவர் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்தே தெரியும் என்றும் அவர் வெற்றி பெற வேண்டும் என விஜய் சேதுபதி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகன் ஜீவாவிடம் படத்தின் தலைப்பை போலவே படமும் ஆரம்பமே அட்டகாசமாக அமைய தன் வாழ்த்தினை கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

Leave a Reply