
ஸ்டைலிஷ் இயக்குனர்’ எனப் பெயரெடுத்த கௌதம் மேனன் சூர்யா, சிம்பு, சமந்தா, நாக சைதன்யா உட்பட சில ஹீரோ, ஹீரோயின்களுக்குத் திருப்புமுனைப் படங்களைக் கொடுத்தவர்.
இன்றைக்கு திரைப்படம் பார்க்க அதிகமாக வரும் இளம் ரசிகர்களுக்கேற்ப படங்களைக் கொடுத்து வருபவர் கௌதம் மேனன். எந்த நேரத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ எனப் பெயர் வைத்து படத்தை ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு அனைத்து திசைகளிலிருந்தும் படத்தை வெளியிட முடியாமல் அச்சத்தைக் கொடுத்து வருகிறார்கள்.
சிம்புவை வைத்து நிம்மதியாக படம் பண்ண இயக்குனரும் இல்லை தயாரிப்பாளரும் இல்லை சிம்பு திரை வாழ்கையில் மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த கெளதம் மேனனும் பாவம் சும்மா நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் ஒரு வழியாக படத்தை முடித்து விட்டார் .
திருப்புமுனைகளைக் கொடுத்தவருக்கே தீராத வலியைக் கொடுத்த சூர்யாவுக்குப் பிறகு அதே போன்றதொரு வலியைக் கொடுத்தார் சிம்பு.
அவர் மட்டும் சரியான நேரத்தில் வந்து கடைசி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பே ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளிவந்திருக்கும். எப்படியோ சிம்புவை சரிக்கட்டி சில நாட்களுக்கு முன்பு படத்தை முடித்தனர்.
ஒரே சமயத்தில் இந்தப் படத்தை தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க ‘சாகசம் சுவாசகா சாகிப்போ’ என்ற பெயரில் எடுத்து முடித்துவிட்டார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியிட்டால்தான் இந்தப் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.
அதனால்தான் தெலுங்கில் படம் முடிந்த பிறகும் வெளியிடாமல் தமிழ்ப் படம் முடிவதற்காகக் காத்திருந்தார். இப்போது இரண்டு படங்களும் முடிந்த நிலையில் செப்டம்பர் மாதக் கடைசி வாரத்தில் இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதன் தெலுங்குப் படத்தை இந்த மாதக் கடைசியில் வெளியிடக் கூடாது என நாக சைதன்யா நடித்துள்ள ‘பிரேமம்’ தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளவர்கள் பிரச்சினை செய்கிறார்களாம்.
‘பிரேமம்’ படத்தை அக்டோபர் 7ஆம் திகதி வெளியிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதனால், ‘சாகசம் சுவாசகா சாகிப்போ’ செப்டம்பர் இறுதியில் வெளிவந்தால் அது ‘பிரேமம்’ படத்தை பாதிக்கும் என்று கருதுகிறார்கள்.
இருந்தாலும் தன் படம்தான் முதலில் வெளிவர வேண்டும் என கௌதம் மேனன் விடாப்படியாகக் கூற, அதற்கு ‘பிரேமம்’ தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நாக சைதன்யா யார் பக்கம் சாய்வது என குழம்பத்தில் உள்ளார்.
இருந்தாலும் தனக்கு திருப்புமுனை தந்த கௌதம் பக்கம்தான் அவர் இருப்பார் என்கிறார்கள். இந்த சண்டை முடிந்தால்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ வெளிவரும் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.