Tuesday, June 6
Shadow

சிம்புவின்அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது ?

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. நீண்ட நாட்களாக படமாகாமல் இருந்த இப்படத்தின் தள்ளிபோகாதே பாடல் அண்மையில் பாங்காக்கில் படமாகியுள்ளது. பல பிரச்சனைகள் குறிப்பாக சிம்பு நடிக்க வராமல் அலைகழித்து ஒரு வழியாக சிம்புவை சமாதான படுத்தி படபிடிப்பை முடித்த கெளதம் மேனன் பல போரட்டங்கள் சந்தித்து ஒரு படத்தை முடித்து ரிலீஸ் தேதியை அறிவித்தார் கெளதம்

இத்துடன் அச்சம் என்பது மடமையடா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் சில போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கௌதம் அறிவித்துள்ளார்.

Leave a Reply