Friday, February 7
Shadow

நடிகர் அஜய் தேவ்கான் பிறந்த தின பதிவு

அஜய் தேவ்கான் ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அஜய் தேவ்கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் திகதியில் கஜோலைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.
இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில், பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் டிராமா உருவாகும் இந்த படத்தில், 49 வயதாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.