Wednesday, December 17
Shadow

நடிகர் அருண் விஜய் – சமூகப் பொறுப்புணர்வுடன் உதவும் கரங்கள் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் அருண் விஜய் – சமூகப் பொறுப்புணர்வுடன் உதவும் கரங்கள் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை, 19 நவம்பர் 2025:

நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை சமூக நலச்செயல்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக, இன்று (19.11.2025) ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

தனது குடும்பத்தினருடன் இணைந்து இல்லத்திற்குச் சென்ற அவர், குழந்தைகளுடனும் முதியோர்களுடனும் நேரம் செலவிட்டு உரையாடினார். அங்குள்ள முதியோர்களின் தினசரி தேவைகள் மற்றும் சவால்களை கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும், இல்லத்தில் உள்ள அனைவருக்கும் உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவருந்திய அருண் விஜய், இந்த தருணத்தை தனது வாழ்க்கையின் சிறப்பு நாளாகக் குறிப்பிட்டார். சமூகத்திற்கு திரும்ப வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட இந்த செயல்பாடு, அவரது மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.