இவரது இயற்பெயர் சங்கர். இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் ‘Friday hero’ (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த படங்கள்
இரவும் பகலும்
எங்க வீட்டுப் பெண்
பஞ்சவர்ணக்கிளி
குழந்தையும் தெய்வமும்
ஒரு விரல்
வல்லவனுக்கு வல்லவன்
விளக்கேற்றியவள்
கௌரி கல்யாணம்
இரு வல்லவர்கள்
காதல் படுத்தும் பாடு
நாம் மூவர்
வல்லவன் ஒருவன்
யார் நீ
காதலித்தால் போதுமா
பட்டணத்தில் பூதம்
சபாஷ் தம்பி
ராஜா வீட்டுப் பிள்ளை
பவானி
பொம்மலாட்டம்
நீலகிரி எக்ஸ்பிரஸ்
நேர் வழி
ஜீவனாம்சம்
முத்துச்சிப்பி
டீச்சரம்மா
உயிரா மானமா
அன்பு வழி
சிரித்த முகம்
அக்கா தங்கை
அன்பளிப்பு
அத்தைமகள்
கன்னிப் பெண்
மனசாட்சி
மன்னிப்பு
நான்கு கில்லாடிகள்
நில் கவனி காதலி
பெண்ணை வாழ விடுங்கள்
பொண்ணு மாப்பிள்ளை
பூவா தலையா
ஆயிரம் பொய்
சி.ஐ.டி.சங்கர்
நிலவே நீ சாட்சி
காலம் வெல்லும்
கல்யாண ஊர்வலம்
கண்ணன் வருவான்
காதல் ஜோதி
மாணவன்
பெண் தெய்வம்
வீட்டுக்கு வீடு
எதிர் காலம்
கெட்டிக்காரன்
குலமா குணமா
நான்கு சுவர்கள்
புதிய வாழ்க்கை
சூதாட்டம்
தேன் கிண்ணம்
வீட்டுக்கு ஒரு பிள்ளை
அன்புக்கு ஒரு அண்ணன்
தங்க கோபுரம்
நூற்றுக்கு நூறு
யானை வளர்த்த வானம்பாடி மகன்
அவசர கல்யாணம்
தெய்வ சங்கல்பம்
கங்கா
கண்ணம்மா
கருந்தேள் கண்ணாயிரம்
காதலிக்க வாங்க
நவாப் நாற்காலி
ராணி யார் குழந்தை
உனக்கும் எனக்கும்
வரவேற்பு
ஆசீர்வாதம்
பதிலுக்கு பதில்
சவாலுக்கு சவால்
டில்லி டு மெட்ராஸ்
மாப்பிள்ளை அழைப்பு
அம்மன் அருள்
அன்புச் சகோதரர்கள்
ஜக்கம்மா
மல்லிகைப் பூ
பொன்வண்டு
பிரார்த்தனை
சொந்தம்
தலைப்பிரசவம்
வாக்குறுதி
வந்தாளே மகராசி
வாயாடி
விஜயா
தெய்வக் குழந்தைகள்
தெய்வாம்சம்
அக்கரைப் பச்சை
அத்தையா மாமியா
கலியுகக் கண்ணன்
கல்யாணமாம் கல்யாணம்
பந்தாட்டம்
பிராயசித்தம்
ரோஷக்காரி
திருடி
உங்கள் விருப்பம்
உன்னைத்தான் தம்பி
வைரம்
அப்பா அம்மா
மகளுக்காக
இதயம் பார்க்கிறது
சினிமா பைத்தியம்
எடுப்பார் கைப்பிள்ளை
உங்க வீட்டு கல்யாணம்
எங்க பாட்டன் சொத்து
தாய் வீட்டு சீதனம்
தொட்டதெல்லாம் பொன்னாகும்
மேயர் மீனாட்சி
மிட்டாய் மம்மி
நீ ஒரு மகாராணி
ஒரே தந்தை
ஒரு கொடியில் இரு மலர்கள்
பணக்கார பெண்
துணிவே துணை
வாயில்லா பூச்சி
ஜஸ்டிஸ் கோபிநாத்
மகராசி வாழ்க
ஆசை மனைவி
அன்று சிந்திய ரத்தம்
காயத்ரி
காலமடி காலம்
மாமியார் வீடு
நல்லதுக்கு காலமில்லை
ஒருவனுக்கு ஒருத்தி
பாலாபிஷேகம்
ராசி நல்ல ராசி
ரௌடி ராக்கம்மா
சொந்தமடி நீ எனக்கு
சக்ரவர்த்தி
கியாஸ்லைட் மங்கம்மா
நீ
அவள் ஒரு அதிசயம்
கங்கா யமுனா காவேரி
இது எப்படி இருக்கு
மக்கள் குரல்
மேளதாளங்கள்
முடிசூடா மன்னன்
பஞ்சாமிர்தம்
ராஜாவுக்கேத்த ராணி
சக்கைப் போடு போடு ராஜா
டாக்ஸி டிரைவர்
உள்ளத்தில் குழந்தையடி
வணக்கத்துக்குரிய காதலியே
வண்டிக்காரன் மகன்
வாழ நினைத்தால் வாழலாம்
இளையராணி ராஜலட்சுமி
ஆடு பாம்பே
தைரியலட்சுமி
கடமை நெஞ்சம்
காமசாஸ்திரம்
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
குழந்தையைத் தேடி
மகாலட்சுமி
மாயாண்டி
நான் ஒரு கை பார்க்கிறேன்
நெஞ்சுக்கு நீதி
ஒரே வானம் ஒரே பூமி
ஜம்பு
காலம் பதில் சொல்லும்
முரட்டுக்காளை
சரணம் ஐயப்பா
அஞ்சாத நெஞ்சங்கள்
எல்லாம் இன்பமயம்
கர்ஜனை
கன்னித்தீவு
கீழ்வானம் சிவக்கும்
குலக்கொழுந்து
நீதி பிழைத்தது
ரத்தத்தின் ரத்தம்
சவால்
அதிசய பிறவிகள்
அஸ்திவாரம்
ஆட்டோராஜா
நன்றி மீண்டும் வருக
ஓம் சக்தி
ஒரு வாரிசு உருவாகிறது
பட்டணத்து ராஜாக்கள்
தாய் மூகாம்பிகை
தனிக்காட்டு ராஜா
தீர்ப்பு
வாழ்வே மாயம்
அபூர்வ சகோதரிகள்
அடுத்த வாரிசு
என் ஆசை உன்னோடு தான்
என்னைப் பார் என் அழகைப் பார்
இன்று நீ நாளை நான்
கைவரிசை
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மலையூர் மம்பட்டியான்
பாயும் புலி
சட்டம்
தாய் வீடு
தம்பதிகள்
தங்க மகன்
துடிக்கும் கரங்கள்
24 மணி நேரம்
ஆலய தீபம்
அம்மா இருக்கா
சரித்திர நாயகன்
எழுதாத சட்டங்கள்
இது எங்க பூமி
இரு மேதைகள்
கடமை
நீங்கள் கேட்டவை
சட்டத்தை திருத்துங்கள்
திருப்பம்
வாழ்க்கை
வீட்டுக்கு ஒரு கண்ணகி
வெள்ளை புறா ஒன்று
விதி
எழுதாத சட்டங்கள்
குடும்பம்
ஆஷா
அந்தஸ்து
அர்த்தமுள்ள ஆசைகள்
அவன்
பந்தம்
சாவி
மூக்கணாங்கயிறு
நேர்மை
ஊஞ்சலாடும் உறவுகள்
சமயபுரத்தாளே சாட்சி
சிவப்பு நிலா
வேலி
யார்
அதிசய மனிதன்
படிக்காதவன்
பிள்ளை நிலா
பூவே பூச்சூடவா
சாட்சி
அன்னை என் தெய்வம்
ஜோதி மலர்
கைதியின் தீர்ப்பு
கண்ணே கனியமுதே
குங்கும பொட்டு
மாவீரன்
மச்சக்காரன்
மருமகள்
மீண்டும் பல்லவி
முரட்டு கரங்கள்
நானும் ஒரு தொழிலாளி
நம்பினார் கெடுவதில்லை
ஊமை விழிகள்
ரசிகன் ஒரு ரசிகை
ரேவதி
சிவப்பு மலர்கள்
பதில் சொல்வாள் பத்ரகாளி
அஞ்சாத சிங்கம்
கூலிக்காரன்
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் வருங்காலத் தூண்கள்
கதை கதையாம் காரணமாம்
காதல் பரிசு
பருவ ராகம்
சொல்லுவதெல்லாம் உண்மை
வைராக்கியம்
வீர பாண்டியன்
விலங்கு
ஒரு தாயின் சபதம்
என் ஜீவன் பாடுது
இரண்டில் ஒன்று
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்
தாய் பாசம்
ஜாடிக்கேத்த மூடி
திராவிடன்
மாப்பிள்ளை
நாளைய மனிதன்
பொன்மன செல்வன்
பொண்ணு பாக்க போறேன்
பொறுத்தது போதும்
தாய்நாடு
அபூர்வ சகோதரர்கள்
அம்மா பிள்ளை
ஆரத்தி எடுங்கடி
கல்யாண ராசி
மௌனம் சம்மதம்
பாலைவன பறவைகள்
13-ம் நம்பர் வீடு
தளபதி
மில் தொழிலாளி
நாட்டுக்கு ஒரு நல்லவன்
நீ பாதி நான் பாதி
சார் ஐ லவ் யூ
வணக்கம் வாத்தியாரே
ஆயுள் கைதி
கஸ்தூரி மஞ்சள்
நாடோடிப் பாட்டுக்காரன்
நாளைய செய்தி
நட்சத்திர நாயகன்
சிங்கார வேலன்
ஏர்போர்ட்
துருவ நட்சத்திரம்
கோகுலம்
மின்மினி பூச்சிகள்
முதல் பாடல்
என் ராஜாங்கம்
கண்மணி
பிரியங்கா
சிந்துநதிப் பூ
வரவு எட்டணா செலவு பத்தணா
அவள் போட்ட கோலம்
சந்திரலேகா
பாட்டு வாத்தியார்
தாய் தங்கை பாசம்
வாரார் சண்டியர்
விஷ்ணு
சுபாஷ்
அருணாச்சலம்
காலமெல்லாம் காத்திருப்பேன்
காத்திருந்த காதல்
புதுமைப்பித்தன்
தர்மா
இனி எல்லாம் சுகமே
சின்ன ராஜா
பூ வாசம்

Related