Wednesday, May 31
Shadow

அயோத்தி’ பட இயக்குனரை பாராட்டிய மன்சூர் அலிகானின் “சரக்கு” படக் குழுவினர்

நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்… சரக்கு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், சற்று தாமதமாக அயோத்தி படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். உலகமே கொண்டாடப் படவேண்டிய படம் அயோத்தி! திறமை வாய்ந்த நடிகரான சசிகுமாரை வைத்து, மூர்த்தி இயக்கியிருந்தார். தமிழ் நாட்டினர், தமிழர்கள் எவ்வளவு மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை நெஞ்சை தொடும் வகையில், இயக்குனர் மூர்த்தி எடுத்திருந்தார்.

அயோத்தி இயக்குனர் மூர்த்தியை, எங்களது சரக்கு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, நடிகர் நடிகைகள், ‘சரக்கு’ பட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பாராட்டினோம்! தொடர்ந்து மக்கள் கொண்டாடும் வகையில், நல்ல கருத்தாழம் மிக்க படங்கள் எடுப்பதற்கு, படக் குழுவினரோடு வாழ்த்தினேன் என்றார் மன்சூர் அலிகான்!