Friday, October 11
Shadow

நடிகர் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய படக் குழு!

பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பாளரான இவர் தன் ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியாகி வெற்றிப் படமாகியுள்ள ‘தர்மதுரை ‘ வரை பல படங்கள் தயாரித்துள்ளார். இவர் இப்போது ‘தனிமுகம்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஜித் இயக்குகிறார். இப்படத்தில் ரியாஸ் கான் நடிக்கிறார். இன்று லீக் கிளப்பில் ‘ தனி முகம் ‘ படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பில் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ், நடிகை அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் சஜித் , ஒளிப்பதிவாளர் கேசவன் உள்பட படக் குழுவினர் அனைவரும் ரியாஸ்கானை வாழ்த்தினர்.

Leave a Reply