Thursday, March 27
Shadow

நடிகர் சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் மற்றும் அவரின் யோகாசனமும்

‘சிந்து பைரவி’ வந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டது.ஆனால், தோற்றத்தில்இன்னமும் அந்தக்காலகட்டத்தைத்தாண்டவில்லைசிவக்குமார். நடிப்பு,ஓவியத்தைத் தாண்டி சமீபகாலமாக இலக்கியமேடைகளிலும்சிவக்குமாரின் கம்பீரக்குரல் ஒலிக்கிறது.சுறுசுறுப்பானசிவக்குமாரின் ஆரோக்கியரகசியம்என்ன? அவரேசொல்கிறார்.

”என் உடலாகிய வண்டிக்குநான்தான் டிரைவர்.கரடுமுரடான பாதைகளில்வண்டியைஓட்டநேரிடலாம்.எப்படிச்சாமர்த்தியமாகஓட்டுகிறோம்என்பதில்தான்இருக்கிறதுசூட்சமம். இதற்கு திறமையும் பக்குவமும்முக்கியம். படித்தவை,கேட்டவை,கற்றுக்கொண்டவை,
கற்பனை, ஆர்வம்எல்லாவற்றுக்கும் ஒருஈடுபாட்டுடன் தீனிபோட்டேன். உடலும்மூளையும் எப்போதும்சுறுசுறுப்பாகஇருக்கிறசூத்திரம் எனக்குஇப்படித்தான்கிடைத்தது.விடிந்தும்விடியாத காலைநாலரைமணிக்குஎழுந்துவிடுவேன்.பிரஷால் பல் துலக்கியபிறகும், விரலால்ஒருமுறைதேய்ப்பேன்.இதனால்,பற்கள் ஒரே சீராகஇருக்கும். பிறகு காலைக்கடன்களைமுடித்துவிட்டு,இரண்டுடம்ளர் தண்ணீர்குடிப்பேன்.அமைதியான,பசுமை நிறைந்த போட்கிளப்சாலையில் வாக்கிங்போவதே பேரானந்தமாகஇருக்கும். 50 நிமிடங்கள்நல்ல காற்றைசுவாசித்துவிட்டுவரும்போது, உடம்பில்ஒருவித புத்துணர்வுகிடைக்கும். அது நாள்முழுவதும் சுறுசுறுப்பாகஇருக்க உதவும். விழிகள்எப்போதும் ஈரப்பதத்துடன்இருக்க வேண்டும்.காலையில்பத்திரிகைகள்படிப்பதுகூட கண்களைக்களைப்பாக்கும்… நீங்கள்கண்களைப்பராமரிக்காமல்இருந்தால்!விழிகளை இடவலமாக 20 முறையும்,மேலும் கீழுமாக 40முறையும்நன்றாகச்சுழற்றுவேன். பிறகுகுளிர்ந்த தண்ணீரில்கழுவுவேன்.
கண் சோர்வில்லாமல்,பார்க்கும் பொருட்கள்’பளிச்’சென தெரியும்.டிவி, கம்ப்யூட்டரில்மூழ்கிஇருக்கும்இந்தக்காலப்பிள்ளைகளுக்குஇந்தப் பயிற்சி ரொம்பவநல்லது.உடல்சுத்தம்உற்சாகத்தைத் தரும்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆலிவ் ஆயில்தேய்த்துக்குளிப்பதையும்,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்குவிளக்கெண்ணெய்தேய்த்துக்குளிப்பதையும்வழக்கமாகவேவைத்திருக்கிறேன்.
அதனால் வெயிலில் சென்றாலும்,உடல் குளிர்ச்சியாக இருப்பதை உணரமுடிகிறது.

14 வயதில்எனக்குத் தொப்பைஇருந்தது. சென்னைக்குவந்தபோது, ‘இந்த மாதிரிதொப்பை இருந்தால்வியாதிதான்’என்றார் ஒருபெரியவர். அதனால்,யோகா பயிலஆரம்பித்தேன். ஆறே மாதங்களில் 38 வகையானஆசனங்களைக்கற்றுக்கொண்டேன். 16ஒவயதில் ஒட்டியாணாஎன்கிற ஆசனத்தைச்செய்து,தொப்பையைக்குறைத்தேன். இந்தஆசனம் செய்யும்போதுவயிறு நன்றாகஒட்டிவிடும்.என்றைக்கு நம்மால் குனியமுடியாமல்போகிறதோ,அப்போதேவயதாகிவிட்டது என்றுஅர்த்தம்.

வயோதிகம் வந்தால் கணுக்கால்,முழங்கால்களில் வலியும்தானாகவே வந்துவிடும்.வஜ்ராசனம் செய்வதன்மூலம்வலி இல்லாமல்இருக்கலாம். குனிந்துஷூவுக்குலேஸ்கூட கட்டமுடியாமல் போகும் இந்தக்காலப்பிள்ளைகள்வஜ்ராசனம் செய்வது நல்லபயனைத் தரும். வாரியார் சுவாமிகள் 90 வயதுவரை’வஜ்ராசனம்’ செய்துஉடலைக் கம்பீரமாக வைத்திருந்தார்.

சிரசாசனம் செய்வதன் மூலம் மூளை வரை ரத்தம் பாய்வதை உணர முடியும்.ஞாபகசக்திஅதிகரிக்கும்.இந்தஆசனம் செய்வதால்மூளை அதிவேகமாகச்செயல்படும்.முதுகைவளைத்துசெய்யக்கூடியபுஜங்காசனம் செய்வதால்,எலும்புகள் உறுதியாகஇருக்கும். இப்படி உடல்உறுப்புகளுக்கானஆசனங்கள்ஏராளமாகஇருக்கின்றன.அத்தனைஆசனங்களும்எனக்குஅத்துப்படிஎன்றாலும் தற்போது 8 ஆசனங்கள்மட்டுமே செய்துவருகிறேன். ஒரு நாள் யோகா செய்தால், மறுநாள்வாக்கிங்என்றுமாறிமாறிசெய்வேன்.பழம்பெருமைபேசுவது எனக்குப்பிடிக்கவே பிடிக்காது.பாராட்டு விழாநிகழ்ச்சிகளில்கலந்துகொள்வது இல்லை.’கற்றது கையளவுகல்லாதது உலகளவு’என்ற நினைப்பு இருந்தால்,
எல்லாத் துறைகளிலும்சாதிக்க முடியும் என்பதுஎன் அசராத நம்பிக்கை.எதிலும் தாமரை இலைத்தண்ணீர்போல்தான்இருப்பேன். அதற்காக,உறவுகளிடமும்நண்பர்களிடமும் பாசத்தைவெளிப்படுத்துவதில்வஞ்சனை காட்டமாட்டேன்.

இந்தக் காலப் படிப்புகள் பெரும்பாலும்சம்பாதிக்கத்தான்வழிவகுக்கின்றன. பலபள்ளிகளில் விளையாட்டுமைதானமே இல்லைஎன்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.ஒழுக்கம்ஆரோக்கியத்தையும்கோட்டைவிட்டுவிடுகிறது
இன்றையக்கல்விமுறை.படித்துமுடித்துகைநிறையப்பணத்தைப்பார்த்ததும்கஷ்டப்பட்டக்காலத்தைமறந்து,பணத்தைத்தண்ணீராகச்செலவுசெய்கின்றனர்.உடல் ஆரோக்கியத்தின்மீதும்அலட்சியமாகஇருக்கிறார்கள்.வயதுஏறும்போது,வியாதிகள்வாட்டும்போதுதான்உடலின்மீதானஅக்கறையும்ஆரோக்கியத்தின் மீதானபயமும் நம்மைஆட்டிப்படைக்கும்.
மது,புகை, மாது போன்ற எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை.தொழிலுக்காகப்பல பெண்களுடன்நெருக்கமாகநான்நடித்திருந்தாலும்,யாருடனும் நான் தவறானஉறவு வைத்திருந்ததுஇல்லை. இதில் எனக்குப்பெருமையும் உண்டு.தவறுகளுக்கான சந்தர்ப்பங்கள்வாய்த்தாலும் அதில்சிக்காமல் மீண்டுவரக்கூடிய மனப்பக்குவத்தைவளர்த்துக்கொள்ளவேண்டும்.

5 பாதாம், 15 உலர் திராட்சை, 2பேரீச்சம்பழம்,1அத்திப்பழம், 1 வால் நட்இவைதான் என் காலை
உணவு. அவ்வப்போது. நாக்கு கேட்கும் ருசிக்காக இரண்டு இட்லி – பச்சை சட்னி அல்லது பொங்கல்அல்லது ஆசைக்கு ஒருதோசை – சட்னி சாப்பிடுவேன். மதியம்சாதம், கூட்டு, பொரியல்,பச்சடி, கீரையுடன்சப்பாத்தியும் இருக்கும்.இரவு நேரத்தில் வெஜ்சாலட் – சட்னி. நாக்ககேட்டால் மட்டும் அரிதாகநளபாக விருந்துஅதிலும் எண்ணெய்உணவுகள்அளவோடுதான் இருக்கும்.

அசைவ உணவுகள்சாப்பிடுவதை நிறுத்தி 30வருடங்களுக்கு மேல்ஆகிறது. வயது ஏற ஏற ஜீரண சக்தி குறையும்.50
வயதை நெருங்குபவர்கள்சைவத்துக்குமாறுவதுதான் நல்லது.சைவம் சாப்பிடுவதால்உடம்பில்தேஜஸ்கூடுவதைநன்றாக உணரமுடிகிறது.சிலவருடங்களுக்கு முன்புஒரு சம்பவம்…ஐந்துகம்பெனிகளுக்குமுதலாளியான ஒருகுஜராத் இளைஞன்திடீரென இறந்துவிட்டான்.ஆராய்ந்ததில் அவனுக்கு ஓய்வே இல்லை என்பதுதெரியவந்தது. ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவானாம்.ஒருமனிதனுக்கு நாள்ஒன்றுக்கு ஏழு மணி நேரத்
தூக்கம் அவசியம். நான்குமணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கானவாய்ப்பு 40சதவிகிதம்.மூன்று மணி நேரம்மட்டுமேதூங்குபவர்களுக்குமாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம்என்கிறது மருத்துவஉலகம். தூக்கத்தைத்தொலைத்தால் ஆயுள்குறையும். 9.30
மணிக்குள் படுக்கைக்குச்சென்றுவிடுவேன்.

படுக்கும்போது, தியானம்செய்வது என் வழக்கம்.இதனால் மனம்ஒருநிலைப்பட்டு,நிம்மதியானநித்திரைகிடைக்கும். இப்படி வரைமுறைக்குள் என்வாழ்க்கையைவகுத்துக்கொள்வதால்உடலும் மனமும்எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறது.வாழ்வில்எவ்வளவுதான்சம்பாதித்தாலும்தேவைகளைக்குறைத்துக்கொள்கிறவனேஉண்மையான செல்வந்தன்.

அதிகம் நான்ஆசைப்படுவது இல்லை.சம்பாத்தியத்தில் ஒரு சிறுபங்கை ஏழைகளுக்குஉதவுவதையும்வழக்கமாக வைத்திருக்கிறேன்.பாகுபாடு இல்லாமல்பாசத்தைப்பகிர்ந்துகொள்வதேபேரின்பம். இதுவே என்வாழ்வில் நான்
கடைப்பிடிக்கும்

காயகல்பம்” என்கிறார்
உற்சாகமாக
மார்க்கண்டேயன்
சிவக்குமார்!

நன்றி

ரவிசங்கர்

Leave a Reply