ஒரு காலத்தில்காமெடியில் சினிமா உலகத்தை புரட்டிப்போட்ட இரண்டு ஜாம்பவான்கள் என்றால் அது கவுண்டமணியும், வடிவேலும் தான். கவுண்டமணிக்கு வயதானதால் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார். அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். அதுவும் ஹீரோவாக மட்டும்.
வடிவேலு நன்றாக போய் கொண்டிருந்த மார்கெட்டை அரசியலில் மூக்கை நுழைத்து கெடுத்து கொண்டார். அதன் பிறகு நீண்ட காலமாக நடிக்கமால் இருந்தவர் ‘தெனாலிராமன்’, ‘எலி’ படங்கள் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். அதுவும் ஹீரோவாக. பல இயக்குநர்கள் காமெடியனாக நடிக்க கூப்பிட்டபோது மறுத்த வடிவேலு விஷால் கேட்டுகொண்டதால் ‘கத்தி சண்டை’ படத்தில் காமெடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
இப்போது விஷயம் என்னவென்றால் வடிவேலுவின் வருகை சூரிக்கு பீதியை கிளப்பியிருக்கிறது. பின்னே ‘கத்தி சண்டை’ படத்தில் சூரியும் ஒரு காமெடி நடிகர் அல்லவா..? எங்கே வடிவேலு வந்தால் தனது கேரக்டரை டம்மியாக்கி விடுவார்களோ என்று அஞ்சியிருக்கிறார் சூரி. இதை இயக்குநர் சுராஜிடமும் சொல்ல.. அவரோ வடிவேலுக்கு சமமாக சூரியின் கேரக்டரை மட்டுமல்ல கெட்டப்பையே சேஞ்ஜ் பண்ணியிருக்கிறார்.
அதாவது முதன்முறையாக பெண் வேடத்தில் நடித் திருக்கிறார் சூரி. காமெடிக்காக பரதநாட்டிய கலைஞர் போன்று வரும் அவர், ஒரு காட்சியில் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற, மான்குயிலே பூங்குயிலே பாடலுக்கு ராமராஜன் ஆடியது போன்று கரகாட்ட கெட்டப்பிலும் நடனமாடியிருக்கிறார்.
பெண் வேடத்தில் அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த காட்சிகளை படமாக்கிய போது விஷால், டைரக்டர் சுராஜ் ஆகியோர் சூரியின் நடன அசைவுகளைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.