Sunday, September 24
Shadow

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு!

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு!

நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ’வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவியும் நடித்துள்ளார். சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

படத்தை வாழ்த்தி நடிகர் வடிவேலு பேசியதாவது, “என் அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார். முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. ‘வெப்பன்’ படத்தினை எல்லோரும் தியேட்டரில் பார்த்து மகிழுங்கள். இப்போது டீசரை பார்த்துக் கொண்டாடுங்கள்” என்றார்.