Friday, April 19
Shadow

நடிகர் விஜய் இன்ஸ்டா பக்கம் திறந்தார். ஒரே நாளில் நாலு மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித் இருவர்களின் ரசிகர்கள் எப்போதும் டுவிட்டரில் சண்டை போடுவார்கள், ஆனால் இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இல்லை.

விஜய் டுவிட்டரில் இருந்தாலும் தனது பட போஸ்டர்களை மட்டுமே பதிவு செய்வார்,  சில நேரங்களில் தன் ரசிகர்களையும் சந்திப்பார் இது மிகவும் அபூர்வமாக மற்றபடி எதுவும் பதிவு செய்ய மாட்டார். அஜித் சுத்தமாக சமூக வலைதளங்களில் இல்லை.

நேத்திக்கு (ஏப்ரல் 1) யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடிகர் விஜய் இன்ஸ்டா பக்கம் திறந்தார். அவர் வந்த சில மணி நேரங்களிலேயே பாலோவர்ஸ் குவிந்தார்கள்.

இன்னிக்கு மார்னிங் நிலவரம் வரை 4 மில்லியன் பாலோவர்கள் விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் உள்ளனர். இன்ஸ்டா பக்கம் திறந்த சில நொடிகளிலேயே அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் விஜய் டாப் 5 லிஸ்டில் வந்துள்ளார்.

அதோடு அவரை இன்ஸ்டாவில் முதலில் பாலோ செய்த பிரபலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என கூறப்படுது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் கீர்த்தி சுரேஷ் தான் முதல் ஃபாலோ பண்ணதாம் ஏற்கனவே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது தற்போது கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிறது இந்த சூழ்நிலையில் இது மேலும் அதை ஊர்ஜிக்கும் படி அமைந்துள்ளது.