
நடிகர் விஷால் – 35வது திரைப்படம் மகுடம் – சென்னையில் பிரம்மாண்ட படப்பிடிப்பு
நடிகர் விஷால் தனது 35வது படைப்பாக உருவாகி வரும் மகுடம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சென்னை TR கார்டனில் பல கோடிகள் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பம்சமாக, இந்தக் காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களும் இணைந்து செயல்படுகின்றனர். மேலும், முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து, சண்டையையும் நடனத்தையும் கலந்த வித்தியாசமான காட்சிகளை அமைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு நடிகர்-இயக்குனர் டி. ராஜேந்திரன் நேரில் வந்து, நடிகர் விஷாலும் படக்குழுவினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், விஷால் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கும் இதே இடத்தில் இதே போன்று பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
