Wednesday, February 1
Shadow

லைசன்ஸே இல்லாமல் பைக் ரைடு எப்படி ? – மஞ்சு வாரியரை கலாய்க்கும் ரசிகர்கள்!

நடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமாவில்  முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பின்னர் மலையாள முன்னணி நடிகர் திலீப் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவைத்திருந்தார். இடையில் இவர்களிடையே  விவாகரத்து ஏற்பட்ட நிலையில்  மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்தார். அகில் இவரது நடிப்பு பேசப்பட்டது‌. அதனை தொடர்ந்து சமீபத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் நடித்தார். இப்படத்திலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் இவர் கேரளா கொச்சி பகுதியில் உள்ள காக்காநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ-விடம் பைக் ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

ஆனால் இதுவே அவருக்கு தற்போது புதிய பிரச்சினையை கொடுத்துள்ளது. துணிவு படப்பிடிப்பு சமயத்தில் அஜித் இமயமலையில் பைக் ரைடு சென்றார். கூடவே மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்றதாக புகைப்படங்கள் வெளியிட்டார். ஆனால் இப்போதுதான் லைசென்ஸ் வாங்கும் மஞ்சு வாரியர் எப்படி அப்போது பைக் ஓட்டினார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் மஞ்சு‌வாரியர் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் தரும் பட்சத்தில் இப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.