Friday, December 6
Shadow

சுரபிக்கு ராசி இல்லா நடிகை இமேஜை மாற்றுமா ஜி.வி பிரகாஷ் “அடங்காதே”

விக்ரம் பிரபு நடித்த இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. நல்ல அழகும், திறமையும் வாய்ந்த நடிகைதான் ஆனால் தமிழில் அவருக்கு ராசியில்லாத நடிகை என்ற இமேஜ்தான் உள்ளது. இவன் வேற மாதிரிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்திலும், ஜீவா படத்திலுல் சிறிய கேரக்டரில் நடித்தார். ஹீரோயினாக நடித்த புகழ் படமும் பெரிதாக பேசப்படவில்லை.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் அடங்காதே படத்தில் சுரபி ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் அண்ணனாக சரத்குமார் நடிக்கிறார்.

இந்தப்ப படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு இரண்டு கெட்-அப்கள். ஒன்று கிராமத்து இளைஞர் வேடம். இன்னொன்று ஒரு வேலையாக வடமாநிலத்துக்கு செல்லும் கெட்அப். அப்படி செல்லும்போது சந்தித்து காதல் கொள்ளும் வடமாநில பெண்ணாகத்தான் சுரபி நடிக்கிறார்.

ஜி.வி.சுரபியின் ராசியில்லா நடிகை இமேஜை பிரகாஷ் தனது வெற்றி ராசியின் மூலம் மோற்றுவாரா என்பது பட ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்.

Leave a Reply