
அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தொடர் வெற்றி காரணம் சிறந்த இசை எல்லாவிதமான இசையிலும் கைதேர்ந்தவர் ஆனால் இவரின் திறமையை வெளிபடுத்தியவர் என்றால் அது தனுஷ் தான் இருவரும் சிறந்த நண்பர்கள் ஆனால் இருவருக்கும் இப்ப கருத்து வேறுபாடு அதற்க்கு காரணம் தனுஷ் தான் தனுஷ்க்கு நிரந்தர நண்பர்கள் என்று இருந்தது கிடையாது வைத்தும் இருக்க மாட்டார் இது தனுஷ் ஸ்டைல்.
தனுஷ் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
விஐபி என்றாலே ரசிகர்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அதன் தீம் மியூசிக் தான். அந்த அளவுக்கு அனிருத்தின் இசை அந்த படத்தில் பட்டையை கிளப்பியது.
ஆனால் விஐபி 2-வில் அனிருத்துக்கு பதில் தற்போதைய தனது ஆஸ்தான இசையமைப்பாளர் சியான் ரோல்டனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் தனுஷ்.
எனினும் படத்துக்கு அனிருத்தான் பின்னணி இசை அமைப்பார் என தற்போது கூறப்படுகிறது.