
இந்த வருடம் அதிக படங்கள் நடித்த பெருமை விஜய்சேதுபதி யை சேரும் இவரின் கைவசம் அதிக படங்களும் உள்ளது அதே போல் நாயகிகளில் அதிக படங்கள் நடித்த பெருமை நம்ம நயன்தாராவை சேரும் இவரின் கைவசமும் அதிக படங்கள் என்பதைவிட முக்கிய படங்கள் இவரிடம் உள்ளது என்று சொல்லலாம் விஜய் முதல் முக்கய படங்கள் உள்ள நடிகை தமிழில் என்றும் நான் தான் நம்பர் 1 என்று அடுத்த வருடமும் சாதிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.
முதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது நயன்தாரா அல்லது மஞ்சிமா மோகன் இருவரில் ஒருவர் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.