ஹரி இயக்கும் எஸ் 3 படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டது இதன் மற்ற வேலைகள் நடந்து கொண்டு இருக்கு இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் என்றும் எதிர்பார்க்கபடுகிறது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.
இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
தானா சேர்ந்த கூட்டம் என்ற பெயரிடப்பட்ட இப்படத்தில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் மற்றொரு நாயகியும் நடிக்கிறாராம்.
சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.