வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணர்களும் குறைவாக இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறு, குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.
வேளாண் பட்ஜெட் குறித்து உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனரும் நடிகருமான கார்த்தி அறிக்கை.