ரெமோ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது எல்லோரையும் உலுக்கியது சிம்பு விஜய்யை தொடர்ந்து அஜித்தையும் கொஞ்சம் கலவரபடுதியது எதற்கும் அஞ்சாத அஜித் சிவாவை கூப்பிட்டு பேசினார் .
அஜீத்தை சந்தித்து நான்கரை மணிநேரம் பேசிய பிறகே தனக்கு சினிமா குறித்த தெளிவு கிடைத்தது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுபவர் சிவகார்த்திகேயன்.
ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதாரே சிவா என பலரும் அவரை பற்றியே பேசுகிறார்கள். ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் அஜீத்தை சந்தித்து பேசியதை நினைத்து மகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் பிரபல இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
அஜீத் சார் படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீஸர்கள் ரிலீஸாகும் போது ஏற்படும் அதே வைப்ரேஷன் அவரை நான் பார்த்தபோதும் எனக்கு ஏற்பட்டது. அவரை சந்திக்க கிடைத்த வாய்ப்பு மிகப் பெரியது.
நான் அஜீத் சாருடன் நான்கரை மணிநேரமாக பேசினேன். அந்த சந்திப்பை தான் என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சந்திப்பாக கருதுகிறேன். ஸ்டார் ஆனதை எப்படி கையாள்வது என தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் குழப்பத்தில் இருந்தேன்.
சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறைக்கு வந்தேன். அதனால் என்ன நடக்கிறது, யார் எல்லாம் என் முதுகிற்கு பின்னால் வேலை செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தேன். அவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன்.
அஜீத் சாரை சந்தித்தபோது எனக்கு மிகவும் தேவைப்பட்ட நம்பிக்கை கிடைத்தது, தெளிவு பிறந்தது. நான் சந்தித்து வருவது போன்ற பிரச்சனைகளை அவர் எப்படி சந்தித்தார் என்பது புரிகிறது.