நடிகர் அஜீத்தின் ஜி படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சங்கர். தொடந்து சிம்புவின் வல்லவன், கருப்ப சாமி குத்தகைதாரர், குசேலன், பட்டத்துயானை போன்ற படங்களில் சிறு வேடத்தில் காமெடியனாக வளம் வந்தார். கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்.
அந்த படத்தின் மூலம் தனக்கு ஒரு அடையாளம் கிடைத்ததால் தனது பெயரை அம்பானி சங்கர் என்று மாற்றிக் கொண்டு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் காமெடியில் கலக்கி இருக்கிறார். எனக்கு ரோல் மாடலே நடிகர் வடிவேலுதான் அவரை போன்று படங்களில் முழு நீள காமெடியனாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் அம்பானி சங்கர்.
வளரும் கலைஞனுக்கு இந்த செய்தியை பிரசுரித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
அஜித் படத்தில் அறிமுகம் ஆனவர் அதனால் நிச்சயம் வெல்வார் valthukkal shankar sir