20 அடி விஸ்வாசம் கட் அவுட் சரிந்து அஜித் ரசிகருக்கு நடந்த விபரீதம்

share on:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விஸ்வாசம் இந்த படம் இன்று உலகம் முழுவதம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த `விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, அவரது ரசிகர்கள் அனைத்து திரையரங்கு முன்பும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் `விஸ்வாசம் திரைப்படம்’ இன்று காலை திரையிடப்பட்டது.

அப்போது, 200-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திரையரங்கம் முன்பு 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரே நேரத்தில் அஜித் கட்-அவுட் மீது 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறி மாலை அணிவித்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அப்போது, பாரம் தாங்காமல் அந்த கட்-அவுட் கீழே சரிந்துவிழுந்தது.

அதைக் கண்டதும், அங்கு நின்றிருந்த ரசிகர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த விபத்தில், அஜித் ரசிகர்கள் ஏழுமலை, அருள், ஸ்ரீதர், முத்தரசன், பிரபாகரன், பிரதாப் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்ததும் அங்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸார், படுகாயம் அடைந்த ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை #viswasam #ajith #ajithfans #cutout