நடிகர் ஜி.வி.பிரகாஷை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் அளவுக்கு மீறி ஓட்டியதால் அவர் கடுப்பாகி ரசிகர்களின் கேலிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இதில் அஜித் போன்ற உச்ச நடிகர்களை தாம் கேலி செய்கிறோம் என்பதை கூட அவர் மறந்துவிட்டார்.
அஜித்தை ஆமை என்று சாடைமாடையாக அவர் கூறியதுதான் நேற்று இணையவுலகில் ஹாட் டாபிக். இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி #FrustratedPsychoGvPrakash எனும் ஹேஷ் டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்ய தொடங்கினர்.