Saturday, November 2
Shadow

அஜித்தின் விடாமுயற்சி படத்தை இதுவரை வெளிவராத தகவல்

பொதுவாக அஜித் படம் அறிவிப்பு வந்தவுடன் அவரின் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த வகையில் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகலை.

படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடிச்சார்.