Monday, June 5
Shadow

அஜித்தின் அடுத்தப் படத்தை தயாரிக்க உள்ள விஷன் ஐ மீடியாஸ்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜித், அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். தற்போது மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தப் படத்தை முடித்ததும் அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த தகவல்களுக்கு மாறாக கடந்த சில தினங்களாக அஜித்தின் அடுத்தப் படம் குறித்து தகவல் அடிபடுகிறது. அதாவது அஜித்தின் அடுத்தப் படத்தை விஷன் ஐ மீடியாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி இயக்கிய அரண்மனை படத்தைத் தயாரித்த நிறுவனம் இது.

முதல் படத்தில் கணிசமான லாபம் சம்பாதித்த இந்த நிறுவனம் அடுத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் திட்டத்தில் அஜித்துக்கு நெருக்கமான சோர்ஸ் மூலம் அவரை அணுகியுள்ளது. விஷன் ஐ மீடியாஸ் பற்றி கேட்டு அறிந்து கொண்ட அஜித் அவர்களின் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். அது மட்டுமல்ல அஜித்தின் கால்ஷீட்டை உறுதி செய்த சோர்ஸ் மூலம் பெரிய தொகை கைமாறியுள்ளதாகவும் தகவல். இந்த கம்பெனி படத்தில் நடித்து முடித்த பிறகே ஆரா சினிமாஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் தருவதாக சொல்லி இருக்கிறாராம் அஜித்.

Leave a Reply