
தமிழ் சினிமாவில் செல்லமாக தலை என்று அழைப்பவர் அஜித் பொதுவாக படங்களில் அஜித் அப்பாவும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடிப்பார் இதனால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது . ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடிப்பார் .
தமிழ் சினிமா நடிகர்கள் தங்கள் படத்துக்காக எந்த ஒரு ரிஸ்கையும் எடுக்க துணிந்துவிட்டனர் இந்த காலத்தில்.
அதிலும் அஜித் பற்றி சொல்லவே வேண்டாம், படத்துக்காக எதையும் செய்ய துணிபவர்.
இந்நிலையில் இவரின் 57வது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதில் தண்ணீரின் அடியில் ஒரு சண்டை காட்சி இருக்கிறதாம்.
இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் தயவுசெய்து நீங்கள் இதுபோன்ற ரிஸ்கை எடுக்க வேண்டாம் என்று கூறிவருகின்றனர்.
ஏற்கனவே அஜித் தன்னுடைய முந்தைய படத்தில் ரிஸ்க் எடுத்து அடிப்பட்டு கொண்டது அனைவரும் அறிந்ததே.