
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட முக்கியமான நடிகர்கள் இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார்.
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்துவருகின்றனர்.நடிகர் விஜயும் ரகசியமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதுபோல நடிகர் அஜித்குமார் சில வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார்.இதற்கு பிறகும் இவரும் இவரது ரசிகர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் யாருக்கும் தெரியாமல் இவரிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளார்.தற்போது அஜித்குமாருக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவிகள் பெரிதும் ஊடகம் வழியாக பேசப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி நீட் தேர்வு காரணமாக உயிரிழிந்த அனிதாவின் நினைவாக 50 லட்சம் ரூபாய் கல்விக்காக கொடுத்து உள்ளார்.
இதற்கு முன் நாடக கலைஞர்கள் சங்கத்திற்கு தங்க நாணயங்கள் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.