Friday, December 6
Shadow

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் சாதனை புரிந்த அஜித்தின் “துணிவு”

 

கடந்த பொங்கலுக்ககு அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளிவந்த படம் துணிவு இந்த படத்துடன் விஜய்யின் வாரிசு படம் வெளியானது இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்துள்ளது. அதோடு விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றி துணிவு படததுக்கு கிடைத்தது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத்தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகியானது. இந்நிலையில் தற்போது படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியைத்தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் படம் ரூ.200 கோடியைக்கடந்து வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.