Tuesday, October 8
Shadow

அஜித்- விஜய் ரசிகர்கள் கைகோர்த்தனர் கன்னட வெறியர்களுக்கு எதிராக

பொதுவாக அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் விஜய் அரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும் நம்மக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை இதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் இந்த இருவரை கலாய்த்தால் எப்படி இருக்கும் அது தான் இப்ப சமுகவளைதலங்களில் நடத்து வருகிறது அதுவும் கன்னட ரசிகர்கள் நம்மாளுங்க சும்மாவா இருப்பாங்க பதிலுக்குrattham வரும் அளவுக்கு வேலைகள் நடந்து வருகிறது.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்திலுள்ள கன்னட அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதோடு, அங்குள்ள திரையுலக நடிகர் நடிகைகளும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதையடுத்து இணையதளங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் விஜய்-அஜித் போன்ற நடிகர்களையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து டுவிட்டர், பேஸ்புக்கில் கிண்டல் செய்து வந்தனர்.

இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் கடும் டென்சனாகி விட்டனர். விளைவு, இதுவரை விஜய் ரசிகர்கள் அஜித்தையும், அஜித் ரசிகர்கள் விஜய்யையும் மாறி மாறி கலாய்த்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர்கள் ஒன்றாக கைகோர்த்து கன்னட ரசிகர்களுக்கு பேஸ்புக், டுவிட்டரில் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, விஜய்யை கலாய்த்தவர்களுக்கு அஜித் ரசிகர் களும் பதிலடி கொடுத்தது போன்று, அஜித்தை கலாய்த்தவர்களுக்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆக, தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றபோதும் விஜய்-அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர்.

Leave a Reply