நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது கோலிவுட்டில். எதையும் வெளிப்படையாக பேசுவது அவருக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இதற்காகத்தான் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு, நேற்று முதல் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார். நேற்று இணைந்ததுமே ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார்.
நேற்று மாலை சிம்பு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சிம்பு நடித்து வரும் படங்களில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு சிம்பு அளித்த பதில் அஜித் ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை வரவழைத்துள்ளது.
அதாவது சிம்பு, யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இனிமேல் என்னுடைய படங்களில் தல பற்றி பேசத் தேவையில்லை. அவருடைய வளர்ச்சிக்கு மகிழ்ச்சி என்று கூறியதுதான் அஜித் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை வரவழைத்துள்ளது.
அஜித் ரசிகர்கள் சிம்பு பேசியதை தவறாக நினைத்துக் கொண்டு சிம்பு பற்றி வசை பாட துவங்கினார்கள். இதற்கு விளக்கம் அளிக்கும்விதமாக சிம்பு அதன்பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் ஆரம்பத்தில் ரஜினி சாரின் ரசிகனாக இருந்தேன். அதன்பிறகு, என்னுடைய காலகட்டத்தில் அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். ரஜினி சாரை கொண்டாட நிறைய பேர் இருந்த சமயத்தில், அஜித் சாரை கொண்டாடுவதில் நான் முதல் ஆளாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய படங்களில் அவருடைய பெயரை பயன்படுத்தினேன்.
அதைவிடுத்து, அவரை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. நான் பேசியதை தவறாக புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று பெரிய விளக்கம் கொடுத்துள்ளார்.
நான் யாரையும் நம்பியும் இல்லை எந்த ரசிகர்கள் பலமும் வேண்டாள் என் ரசிகர்கள் போதும் நான் மேலே இருந்து கிழே விழுந்தா பயம் நான் கிழே தான் இருக்கேன் மேலே போக முயற்சியில் தான் உள்ளேன் என்று பேசியுள்ளார் சிம்பு