பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்துக்கு துப்பறிவாளன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மிஷ்கினின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் இதுவும் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. இதில் விஷால் ஜோடியாக தெலுங்கின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க பிரசன்னா, பாக்யராஜ், வினய் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது கமலின் இளைய மகளும் அஜித்தின் ‘தல 57’ நாயகியுமான அக்ஷரா ஹாசனும் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்படத்தில் லேடி டானாக நடிப்பார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.