Wednesday, May 31
Shadow

ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை வேலப்பன்சாவடியில் அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறப்பு

 

ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை வேலப்பன்சாவடியில் அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறப்பு

*தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான திரு. பூச்சி.எஸ்.முருகன் திறந்து வைத்தார், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு*

இலாப நோக்கற்ற அறக்கட்டளையான அக்ஷயா டிரஸ்ட், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. முடிச்சூர், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் மற்றும் பாலவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அதன் இல்லங்கள் மூலம் 180 முதியவர்களை அக்ஷயா டிரஸ்ட் பராமரித்து வருகிறது.

குடும்பத்தால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களை முறையான மற்றும் விரிவான விசாரணைக்கு பிறகு கண்டறியும் அக்ஷயா டிரஸ்ட், அவர்களுக்கு தேவையான தங்குமிடம், ஆரோக்கியமான உணவு, மருத்துவ பராமரிப்பு, பொழுதுபோக்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு மற்றும் பராமரிப்பை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. சூரிய ஒளி மின்சக்தி, கொசுவலை, வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, ஒலி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இல்லங்கள் இங்கு வசிப்பவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் அமைதி மிக்கதாகவும் மாற்றுகின்றன.

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கு பெயர் பெற்ற அக்ஷயாவின் இலவச முதியோர் இல்லங்கள் நன்கு வகுக்கப்பட்ட
செயல்முறைகளை பின்பற்றி, அர்ப்பணிப்புள்ள பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்களின் ஆதரவை இவை பெற்றுள்ளன. பல குடும்பங்கள் தங்கள் சிறப்பு நாட்களை அக்ஷயாவின் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுடன் குடும்பம் போன்ற சூழலில் வருடம் தவறாமல் கொண்டாடுகிறார்கள். அக்ஷயா அறக்கட்டளையின் அர்ப்பணிப்பான சேவையால் ஈர்க்கப்பட்டு,
பல கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்களும் தங்கள் நிதி உதவியை வழங்குகின்றன. இருந்தபோதிலும்,
உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக நன்கொடையாளர்களின் ஆதரவு இன்னும் தேவைப்படுகிறது.

இந்நிலையில், சென்னை வேலப்பன்சாவடியில் தனது 5வது இலவச முதியோர் இல்லத்தை அக்ஷயா டிரஸ்ட் தொடங்கியது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு கோவில் நுழைவுவாயில் வளைவுக்கு எதிரே இது அமைந்துள்ளது. படுக்கையை விட்டு அசைய இயலாத 30 பேர் உள்ளிட்ட 130 மூத்த குடிமக்களுக்கு புதிய வாழ்க்கையை இந்த இல்லம் வழங்கும். இதன் மூலம் மொத்தம் 300 ஆதரவற்ற மூத்த குடிமக்களை அக்ஷயா அறக்கட்டளை பராமரிக்கும்.

அக்ஷயா ட்ரஸ்டின் வேலப்பன்சாவடி கிளை முதியோர் இல்லத்தை 2023 மே 7ம் தேதி காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான திரு பூச்சி.எஸ்.முருகன் திறந்து வைத்தார். ஹூண்டாய்
மோட்டார் இந்தியா லிமிடெட் இயக்குநர் மற்றும் சிஎம்ஓ திரு சி.எஸ். கோபால கிருஷ்ணன், லான்சன் டொயோட்டாவின் இணை நிர்வாக இயக்குநர் திரு சிவங்கா லங்காலிங்கம், நடிகை
கலைமாமணி திருமதி தேவயானி ராஜகுமாரன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அக்ஷயா டிரஸ்ட் குறித்த மேலும் விபரம் அறிய
akshayatrust2001@gmail.com எனும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.akshayachennai.org இணையதளத்தை பார்வையிடவும்.
தொலைபேசி –

முடிச்சூர் – 9244913690 / பள்ளிக்கரணை- 9952932806 / வளசரவாக்கம்- 9360399636 / பாலவாக்கம்- 6374400886 /வேலப்பன்சாவடி- 7010191233
பொது விசாரணைக்கு –
94457 68887 / 98410 13690.

Akshaya Trust opens its 5th free old age home at Velappanchavadi for destitute senior citizens.

Akshaya Trust, a non-profit organization, has been providing shelter to destitute senior citizens
for more than two decades. The Akshaya Trust presently provides free home to 180 seniors
across its four homes located at Muduchur, Pallikaranai, Valasaravakkam, and Palavakkam.
The organization uses a comprehensive screening process to identify and admit deserving
senior citizens abandoned by their families. The residents are provided with comfortable
accommodation, healthy food, medical care, entertainment, happy living and above all love and
care. The homes are equipped with solar electricity, mosquito nets, washing machines, TV &
audio systems to make the lives of the residents comfortable and peaceful.
Akshaya’s free old-age homes, known for their clean and healthy environment, well-defined
process and dedicated staff members, have garnered the support of many generous donors.
Many families regularly celebrate their special days with the old age home residents, creating
an extended family-like environment. Impressed by the dedicated service of Akshaya Trust,
many corporate and business houses too have been extending their financial assistance. Still,
the ever increasing expenses in terms of food, shelter and medical treatments, demand the
support of more generous donors, to help the cause.
On the other hand, keeping in mind the growing need for support to the destitute senior
citizens, Akshaya Trust began the operations of its 5th free old age home at Velappanchavadi,
opposite to the Thiruverkadu temple site entrance arch at the poonamallee high road. This
home will provide new life for 120 senior citizens, including 30 bedridden people. With this new
home, Akshaya will be supporting 300 needy destitute senior citizens in total.
The Velappanchavadi home was inaugurated on 7th of May 2023, at 10.00 am by the Chief
Guest Shri. Poochi.S.Murugan, Chairman of Tamil Nadu Housing board & Vice President of
South Indian Film Artists Association. Shri C.S. Gopala Krishnan, CMO/ Director of Hyundai
Motors India Limited, Sri.Sivanka Lankalingam, JMD of Lanson Toyota and
Kalaimanai.Smt.Devayani Rajakumaran, Cine artist were the Guests of Honor. The function was
followed by cultural programs.

Our contact
akshayatrust2001@gmail.com or visit us at www.akshayachennai.org
Ph – 94457 68887 / 98410 13690