
அடிதடி இல்லாத வடசென்னை வாழ்க்கையைப் பேசும் ‘ஆல் பாஸ்’!
அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை என ஒரே மாதிரியான பிம்பமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. அந்தப் பார்வையை முற்றிலும் மாற்றி, வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகியுள்ளது ‘ஆல் பாஸ்’.
மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 9-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா ஆகியோருடன் சஞ்சய், சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர் மற்றும் ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வடசென்னையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் ஒளிப்பதிவை ‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தில்ராஜு மேற்கொண்டுள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தனக்கென தனி இசை அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு மோகன் ராஜன், நிலவை பார்த்திபன் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
‘பசங்க’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய எஸ். பாஸ்கர் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெயசீலன். டி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர் ஐ. ராதிகா நடன அமைப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைத்துள்ளார்.
ஒப்பனை – எல்.வி. ராஜா, உடைகள் – ஏ.எஸ். வாசன், ஸ்டில்ஸ் – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
“வடசென்னை மக்களை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைக்கும் படம்”
படத்தின் இயக்குநர் மைதீன் கூறுகையில்:
“‘ஆல் பாஸ்’ ஒரு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள கதை. வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை, கொலை போன்ற விஷயங்கள்தான் இருக்கும் என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக வடசென்னையில் வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.
வடசென்னையை மையமாகக் கொண்ட கதை என்பதால், படத்தின் முழுப் படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே நடத்தினோம். இதன் மூலம் அந்தப் பகுதியின் உண்மையான வாழ்வியலை இயல்பாக பதிவு செய்ய முயற்சி செய்துள்ளோம்.
‘ஆல் பாஸ்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

‘All Pass’ to Hit Theatres on October 9; A Different Take on North Chennai Life
Maideen’s film promises to showcase the everyday lives and emotions of North Chennai beyond the usual gangster stereotypes
North Chennai has often been portrayed in Tamil cinema through stories revolving around violence, rivalry and crime. Breaking away from that familiar portrayal, ‘All Pass’ is set to present the everyday lives, relationships and emotions of the people of North Chennai.
Written and directed by Maideen, the film is produced by Mohana R. under the banner of One Step Entertainment. The film is scheduled to release in theatres across Tamil Nadu on October 9.
Dushyanth, known for his performances in films such as Nirangal Moondru and Tharunam, plays the lead role, while Janani, who rose to popularity through Bigg Boss and later appeared in an important role in Leo, plays the female lead.
The film features an ensemble cast including Jayaprakash, Senthikumar, director Subramaniam Siva, Vinodhini, Prasanna Balachandran, Mohana R., Sathya, Sanjay, Gokul and Nikhil in prominent roles.
Actor Sarath Lohithaswa, known for films such as Pandianadu and Ethir Neechal, plays the antagonist. Roshan Basheer, who played the antagonist in Papanasam, and Aruvi Madan, who was seen as the PT teacher in Bison, are also part of the cast in important roles.
Director Murthy and Kalaiarasan Kannusamy appear in comic roles.
The technical crew includes cinematographer Dilraj, who has worked on films such as Kalaga Thalaivan, Annadurai and Thagararu. Music is composed by acclaimed composer James Vasanthan, who shot to popularity with Subramaniapuram. The songs have been penned by Mohan Rajan, Nilavai Parthiban and James Vasanthan.
S. Bhaskar, who worked on Pasanga, has handled the editing, while Jayaseelan T is the art director. Choreography is by renowned dance choreographer I. Radhika, with action sequences choreographed by Metro Mahesh.
The other members of the technical team include L.V. Raja (Make-up), A.S. Vasan (Costumes), Annadurai (Stills), Gibson UGA (Publicity Designs) and Bhuvan Selvaraj (PRO).
Director Maideen on presenting a different side of North Chennai
Speaking about the film, director Maideen said that All Pass is essentially a family-oriented story and aims to offer audiences a different perspective of North Chennai.
“Whenever North Chennai is portrayed in Tamil cinema, it is usually associated with violence, fights, bloodshed, rivalry and murder. We wanted to move away from that image and make a film that speaks about the real and everyday lives of the people of North Chennai.
Since the story is set in North Chennai, we shot the entire film in North Chennai and its surrounding areas. Our intention was to capture the lifestyle of the people there in a natural and realistic manner.
All Pass is releasing in theatres across Tamil Nadu on October 9. I kindly request the public, cinema lovers and members of the press and media to extend their support to our film.”
With its focus on family emotions and an unexplored side of North Chennai life, ‘All Pass’ is gearing up for its theatrical release on October 9.
