தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்லகதையம்சம் கொண்ட படம் வரும் அப்படியான ஒரு படம் தான் அம்மிணி அது மட்டும் இல்லாம உண்மை கதையும் கதை அல்ல நிஜம் தொலைகாட்சியில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த அம்மிணி யதார்ர்த்தமான கதை மற்றும் திரைகதை இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லி அந்த அளவுக்கு சிறந்த படம் என்றும் சொல்லலாம்
அம்மிணி இந்த படத்தில் சாலம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவரின் இரண்டு மகன்களாக நித்தின் சத்யா மற்றும் ஸ்ரீ பாலாஜி அம்மிணி பாட்டியாக சுப்புலக்ஷ்மி மருமகளாக ரேணுகா மற்றும் அன்னம் இசை கே பாடல்கள் முத்துகுமார் ஒளிப்பதிவு தபஸ் நயாக் தயாரிப்பு வென் கோவிந்தன்
வியாசர்பாடியில் குடிசை பகுதியில் வசிக்கும் சாலம்மா இவருக்கு இரண்டு மகன்கள் அதி ஒருவர் ஆட்டோ ஓட்டுபவர் அவர் தான் நித்தின் சத்யா இன்னொரு மகன் குடிகாரன் செல்வம் சாலம்மா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் தன் கணவன் வேலையில் இருக்கும் பொது இறந்தாதால் அந்த வேலை இவருக்கு கிடைக்க அந்த வருமானத்தில் இரண்டு பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் வளர்த்து ஆளாகக்கிறார் பெண் ஒரு கட்டத்தில் அங்கு இருக்கும் ஒரு ரௌடியை காதலித்து திருமணம் செய்கிறார் இதனால் குடும்பத்தை விட்டே தள்ளி வைக்கிறார்கள் சாலம்மா எல்லோராலும் பாரட்டகுடிய செவிலியர் கஷ்டப்பட்டு கணவன் இல்லாமல் தன் குடும்பத்தை காபற்றி வருபர் மகன் நித்தின் சத்யா ஒரு சுயநலவாதி அவன் மனைவியும் அவனைப்போலவே செல்வம் எதை பற்றியும் கவலை படாமல் வாழ்பவன் இவர்கள் வீட்டில் குப்பை பொருக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து கௌரவமாக வாழ்பவர் அம்மிணி பாட்டி சாலம்மா வீட்டில் வாடகைக்கு இருப்பவர். தன் கணவனை இழந்த அம்மிணி பாட்டி எதை பற்றியும் கவலை இல்லாதவர் இன்று தான் நிஜம் நாளை என்பது பொய் என்று வாழ்பவர் உழைத்து தான் தான் சாப்பிடனும் என்பதால் குப்பை பொருக்கி அதில் வரும் வருமானத்தி தான் மட்டும் சாபிடாமல் அங்கு இருக்கும் ஏழை குழந்தைகளையும் காபாற்றுபவர் .
சாலம்மா ஓய்வுபெற்றால் அதில் வரும் பணத்தை வைத்து பசங்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று திட்டம் போடும் சமயத்தில் அவர் வீடு கட்டும் பொது வாங்கின கடன் சுமையும் வந்து நிற்க என்ன செய்வது என்று அறியாமல் இருப்பார் அந்த சமயாதில் ஓடி போன மகன் மகன் அதாவது பேரன் திடீர் என்று வருகிறான் குடுபத்தில் பிரச்னை ஆரம்பம் இவன் பணத்தில் பங்கு போடா தான் வந்து இருகிற்றான் என்று அவனும் அந்த நோக்கத்தில் தான் வந்து இருப்பான் சாலம்மா மகன் நித்தின் சத்யா ஆசை வார்த்தைகள் காண்பித்து செல்வத்துக்கு தெரியாமல் வீட்டை அவன் பேருக்கு எழுதி வாங்கிவிடுகிறான் ஓய்வு பெற்ற பணம் வந்தும் கடன் போக வெறும் ஆறாயிரம் தான் மிச்சம் என்றவுடன் குடும்பத்தில் சண்டை இரு மகன்களும் சண்டை அந்த நேரத்தில் நித்தின் சத்யா செல்வதை பார்த்து மரியாதையாக வீட்டை விட்டு வெளிய போ என்று சண்டை அதை தடுத்தஅம்மாவை நீயும் அவன் குட போ என்று சொல்ல சாலம்மா நிலைகுலைந்து நிற்கிறாள் கை இருந்த பணம் சொத்து எல்லாத்தையும் பிடுங்கிவிட்டு இப்படி சொல்லுகிறானே என்று உழைத்து உழைத்து ஓடாய் போன சாலம்மா என்ன ஆனால் அவளை மகன்கள் காப்பாற்றினார்களா இல்லையா அம்மிணி பட்டி நிலை என்ன என்பது தான் மீதி கதை
சாலம்மாவாக லட்சுமிராமகிருஷ்ணன் அப்படியே அரசு பொது மருத்துவமனை ஆயாவை கண் முன்னாடி நிறுத்தி இருக்கிறார். அப்படியான ஒரு நடிப்பு நிச்சயம் இவருக்கு தேசிய விருதுக்கு வாப்ப்பு உண்டு நடிப்புக்கு மட்டும் இல்லை இயக்கத்துக்கும் தான் மிக சிறந்த இயக்குனர் என்பதை நிருபித்துள்ளார் . அருமையான திரைகதை காட்சியமைப்பு மிகவும் தெளிவான படம் ஒரு சத்யஜித்ரே படம் பார்பதுபோல ஒரு படத்தை வழங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்
படத்துக்கு மேலும் வலு சேர்ப்பது கேவின் இசையும் பின்னணி இசையும் அதே போல் பாடல்களும் தேவை இல்லாத சதம் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவாக கொடுத்துள்ளார்.
எதார்த்தமான நடிகர்கள் நடிகைகள் படத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்க்கிறது அத்தி பூ பூப்பதுபோல தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படைப்பு