Friday, June 2
Shadow

மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு – “கொடுவா” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமாநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர்.

சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “கொடுவா”. இராம்நாடு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமாநாதபுரம் மாவட்டத்தை சுற்றி  உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது.  இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமாநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு  அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேற்று யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டைட்டில் டீசர் மற்றும் இன்று ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – பிளேஸ் கண்ணன் (Dwarka Productions LLP)
இயக்கம் – சுரேஷ் சதையா
இசையமைப்பாளர் – தரண் குமார்
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
படத்தொகுப்பு – V J சாபு ஜோசப்
கலை இயக்கம் – சுரேஷ் கல்லரி
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

Music Director Yuvan Shankar Raja revealed the Title Teaser of NitinSathyaa starrer “Koduvaa”

Dwarka Productions LLP Blaze Kannan and Sreelatha Blaze Kannan are producing a new film titled ‘Koduvaa’ starring NitinSathyaa in the lead role. This film, directed by Suresh Sathaiah has an intense story premise set against the backdrops of prawn farming. While Yuvan Shankar Raja launched the film’s Title Teaser, music director Actor and Music Director GV Prakash Kumar & actress Aishwarya Rajesh have released the film’s first look.

Actor NitinSathyaa grabbed everyone’s attention with his realistic performance in Chennai 600028 and continued to impress the fans with good projects. Following Chennai 600028 II, he is now playing the lead character in the film ‘Koduvaa’. The story is about a youngster’s life at a shrimp farm in Ramanathapuram, interwoven with romance, family, conflicts, and revenge, which are well-knit together as an entertaining package.

Filmmaker Suresh Sathaiah has crafted this film with a riveting screenplay that will engage audiences from all walks of life. The crew has shot the entire film across the real locations of shrimp farms in and around the Ramanathapuram district. Actor NitinSathyaa plays the lead role in this movie. He underwent training at Shrimp farms to give a native and natural look to his respective character in this movie. Samyuktha Shanmuganathan Plays the Female Lead.

The film’s title teaser was revealed by Yuvan Shankar Raja on December 29, 2022, and the first look poster unveiled by GV Prakash & Aishwarya Rajesh today (December 30, 2022) have received a fantabulous response from the fans.

With the film’s shoot already wrapped up, the post production work is briskly nearing completion. The official announcement about the film’s trailer and the audio launch will be made by the production house soon.

Star Cast

NitinSathyaa
Samyuktha
Vinod Sagar
Swayam Siddha
Nayanasai
Subbu Panchu
Subathra
Aadukalam Murugadoss
Santhana Bharathi
Aadukalam Naren

Technical Crew

Banner: Dwarka Productions LLP
Producer: Blaze Kannan
Director: Suresh Sathaiah
Music Director: Dharan Kumar
DOP: Karthik Nallamuthu
Editor: VJ Sabu Joseph
Art Director: Suresh Kallery
PRO: Sathish – Siva (AIM)