Sunday, October 6
Shadow

ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படமான ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சதீஷ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இணைகிறார்கள். தனபால் பத்மநாபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். 8 பாயிண்ட் என்டர்டெய்ண்மென்ட் சார்பாக பி. அருமைச் சந்திரன் தயாரிக்கிறார்.

துள்ளல் இசைக்கு சொந்தக்காரரான ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’. இதனைக் கேள்விப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரத்யேக செய்தியை ஜோஷ்வா ஶ்ரீதருக்கும் ‘பறந்து செல்ல வா’குழுவினருக்கும் அனுப்பி உள்ளார். இசைப்புயல் தனது வாழ்த்துச் செய்தியால் ‘பறந்து செல்ல வா’குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
அவர் அனுப்பியுள்ள செய்தி:

‘என் நண்பர் ஜோஷுவா ஸ்ரீதருக்கு உரிய வெற்றியும் அன்பும் கிடைக்க வாழ்த்துகிறேன். ‘பறந்து செல்ல வா’ குழுவில் இருக்கும் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply